Blogroll

Saturday, July 23, 2011

கோழி பொரியல்

தேவையானவை 

  • கோழி கறி - அரைக் கிலோ
  • பெரிய வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - 3
  • பூண்டு - 5 பல்
  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
  • வரமிளகாய் - 2
  • கறிவேப்பிலை - 5 இதழ்
  • மல்லித் தழை - சிறிது
  • சோம்பு - ஒரு மேசைக்கரண்டி
  • மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
  • மல்லித் தூள் - ஒரு மேசைக்கரண்டி
  • மிளகு தூள் - அரை மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் - அரை மேசைக்கரண்டி
  • கடுகு - சிறிது
  • எண்ணெய் - தாளிக்க

  • செய்முறை 

  • முதலில் சிக்கனை கழுவி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சிறிது சேர்த்து வைக்கவும். பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். பூண்டு மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும். கறிவேப்பிலை மற்றும் வரமிளகாயை கிள்ளி வைத்துக் கொள்ளவும்.


  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சோம்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாயை போட்டு தாளிக்கவும்.


  • பின் பூண்டு மற்றும் வெங்காயத்தை சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  • வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும்படி வதக்கி தக்காளியை சேர்த்து குழையும் வரை வதக்கவும்.


  • பின் ஊற வைத்துள்ள கோழிக் கறியை சேர்த்து நன்கு பிரட்டி 5 நிமிடம் வேக விடவும்.


  • பின்பு மிளகுத் தூள் தவிர கொடுத்துள்ள மற்ற தூள் வகைகளை தேவையான உப்புடன் சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும்.


  • எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் மிளகு தூளை சேர்த்து மல்லித் தழையையும் போட்டு கிளறி 2 நிமிடம் வேக விடவும்.


  • இப்போது சுவையான கோழி பொரியல் தயார். இறக்கிய பின் விரும்பினால் தேங்காய் துருவல் சிறிது சேர்க்கலாம்.


  • அசைவம் 

0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More