Blogroll

Sunday, July 24, 2011

குழந்தை தொழிலாளர்கள்



கடந்தவாரம் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு குறித்து பலரும் பேசியிருப்பர். இந்த தீர்ப்பு என்னை ஈர்க்கக்காரணம் தரமான கல்வி எனும் பெயரில் நடை பெரும் கல்விக்கொள்ளைக்கு முற்று ப்புள்ளி வைக்க ஒரு தொடக்கமாக கருதுவதே.
கல்வி என்று தனியார்மயமாக்கப்பட்டதோ அன்றே நாம் மக்களுக்கும் நாட்டிற்கும் அநீதி இழைக்கப்பட்டதாகவே எண்ணுகிறேன். இதில் கொடுமை என்னவெனில் பல சாராய வியாபாரிகள் இன்று கல்வி வள்ளல்கள் ஆகி கல்விநிலையங்கள் நடத்துகின்றனர் ஆனால் அரசோ சாராயக்கடை நடத்துகிறது. சாராயக்கடை நடத்தமுடியும் அரசால் தரமான கல்வி மற்றும் மருத்துவ நிலையங்களை நடத்தமுடியாதது ஏன்? சமச்சீர் கல்வியை மறுப்பதன் மூலம் மறை முகமாக அரசு பள்ளிகாளை மறைமுகமாக தரம் தாழ்த்தி தனியார் கல்வி நிறுவனங்கள் [பள்ளி மற்றும் கல்லூரிகள்] மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான உழைப்பாளிகளை உருவாக்கிக்கொடுக்கும் செயல்தான்.
கல்விகடன் எனும் திட்டம் பற்றி கேள்விப்பட்டவுடன் எந்த அளவு மகிழ்ந்தேனோ அதை விட இன்று அத்திட்டம் குறித்து வருத்தப்படுகிறேன். இதன் காரணம் இத்திட்டம் மாணவர்களைவிட கல்வி வியாபாரிகளுக்கு சரியான சமயத்தில் பணம் கிடைக்க செய்யப்பட்ட ஏற்பாடாகவே எண்ணுகிறேன்.சுலபத்தில் கடன் கிடைப்பதில்லை என்பது ஒருபுறம், கடன் கிடைத்து படித்து முடித்தால் வேலை கிடைப்பதில்லை என்பது மறுபுறம். ஆனால் கடன் மட்டும் நம் நம் மீது ஏற்றப்படுகிறது. இந்நிலைதான் குழந்தை தொழிலாளர்களுக்கான உற்பத்திமையமாக இந்தியாவை மாற்றும் மூல காரணமாக இருக்கிறது.
1986ம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் (தடை-சீரமைப்பு) சட்டம் இயற்றப்பட்டது.இச்சட்டம் அபாயகரமான தொழில்கள் அல்லது குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கும் தொழில்கள், குழந்தைகளின் உடல், மனம், பழக்கவழக்கத்தில் அபாயம் தரும் தொழில்கள் மற்றும் சமூகமேம்பாட்டைத் தடுக்கும் தொழில்களில் குழந்தைகள் ஈடுபடுவதை தடுக்கவேண்டும் என்று கூறுகிறது. ஆனால் மறுபுறம் அரசே மறைமுகமாக கல்விகொல்லையை ஊக்குவித்தும் சமசீர்கல்வி தட்டத்தை எதிர்த்தும் செயல்படுவதின் மூலம் மறைமுகமாக குழந்தை தொழிலாளர்களை உற்பத்தி செய்வதை எங்கு சொல்லிவருத்தப்படுவது.





ஏதோ நம்மால் முடிந்த பின்வரும் உதவியை செய்வோமே,

தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் அல்லது குழந்தை தொழிலாளர்களை கண்டாலோ உடனே “RED Society” யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.




0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More