Blogroll

Sunday, July 24, 2011

தாயா? தாரமா?


பாசமிகு இதயங்களே.. இன்று நமது அரட்டை அரங்கில் ஒரு பட்டிமன்றம் ஒருவனுடைய ஏற்றத்திற்க்கு காரணம் தாயா? தாரமா ? ..சுவையாக நடந்து கொண்டிருக்க்கும் இந்த வேலையில் ஒலிவாங்கியை எடுத்து உறையாற்ற (மொக்க) போட முடியததின் காரணமாக வருத்த்ததோடு இங்கு நான் ஏற்கனவே பதிவிறக்கம் செய்த ஒரு சிறுகதையை மீண்டும் ஒரு முறை உங்கலோடு பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என என்னுகிறேன். காரணம் தாய்மீது கொண்ட அன்பின் காரணமாக.. இதோ..

கண் திறந்தது

என் அம்மாவுக்கு ஒரு கண் மட்டுமே. அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் இனம் புரியாத வெறுப்பும் எரிச்சலும் ஏற்பட்டது, அவரை அம்மா எனச் சொல்லிக் கொள்ளவே மிகவும் கேவலமா இருந்தது. தன் ஒற்றைக் கண்ணுடன் தான் செய்யும் சிறு கைவினைப் பொருட்களை அருகிலிருந்த சந்தையில் விற்று என்னைப் படிக்க வைத்தார். அவரை மிகவும் வெறுத்த நான் ஒரு நாள் நான் கல்வி கற்ற பாடசாலைக்கு வந்த போது அவர் மீது கேவலமாக வீசிய பார்வையில் அப்படியே சுருண்டு திரும்பினாள்.

வகுப்பிலிருந்த எல்லோரும் “ உன் அம்மாவுக்கு ஒற்றைக் கண்ணா ?” எனக் கேட்ட போது நான் அடைந்த அவமானம் சொல்லுந்தரமன்று.

என் மனதில் அடைத்து வைத்திருந்த வெறுப்பை ஒரு நாள் நேரிடையாகவே அவரிடம் கொட்டினேன், “ ஒரு கண்ணுடன் எனக்கும் அவமானத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை விட, நீங்கள் ஏன் இந்த உலகை விட்டே போய் விடக் கூடாது “ என, அவர் ஒன்றும் கூறாமல் மௌனமாக அந்த இடத்தை விட்டகன்றார், நான் சொன்ன சுடுசொல் எனக்குள் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தினாலும் இதுகால வரை மனதுக்குள் வைத்து மறுகியதைக் கொட்டி விட்ட நிம்மதியுடன் தூக்கமாகி விட்டேன்.

நடுஇரவு, மிகுந்த தண்ணீர் தாகம் ஏற்படவே, அடுக்களை விரைந்த போது அங்கே என் அம்மா, மூலையில் இருந்து தன் ஒற்றைக் கண்ணால் கண்ணீர் வடித்து விம்மி அழுது கொண்டிருந்தார், அழுகைச் சத்தத்தில் என் நித்திரை குழம்பிவிடக் கூடாது என தன் புடவையால் வாய் பொத்தியபடி இருந்தது என் நெஞ்சைப் பிழிந்தது, அமைதியாக அங்கிருந்து நகர்ந்து கொண்டேன்.

அப்போது மனதில் நினைத்துக் கொண்டேன், கவனமாகப் படித்து முன்னேறி இந்த வறிய சூழ்நிலையிலிருந்தும் அசிங்கமான அம்மாவிடமிருந்தும் சீக்கிரம் விலகிவிட வேண்டும் என, அவரை உதாசீனம் செய்தது மனதை உறுத்தியவாறு இருந்தாலும் என் தொடர் வெற்றிகளால் காலப் போக்கில் யாவையும் மறந்தேன்.

வேலை செய்து கொண்டே பட்டப்படிப்பை முடித்து, அழகான நல்ல ஒரு பெண்ணைத் திருமணம் செய்து இனிதான குடும்ப வாழ்வை, செல்வச் சிறப்போடு வாழ்ந்தேன். என் அம்மா பற்றிய எண்ணங்களை முற்றிலுமாக என் நினைவுகள் என் வேலைகளாலும், குடும்பத்தாலும் மறக்கப்பட்ட வேளையில், அவர் இறந்தாரா இருக்கிறாரா என அறிந்து கொள்ளக் கூடி விளையாத மனசாட்சி அற்ற என் முன்னால் அவர் ஒருநாள் வந்து நின்ற போது வானமே தலையில் விழுந்தது போல விக்கித்து போனேன்.

என் செல்ல மகள் வீரிட்டுக் கத்தினாள், அம்மாவின் அசிங்கமான ஒற்றைக்கண் முகத்தைப் பார்த்து. மனம் வந்து அவரை நோக்கி “ யார் நீ ? உனக்கு என்ன வேண்டும் ? என் குழந்தையை பயமுறுத்தி விட்டாயே ? “ என கூச்சலிட்டேன். “ சீக்கிரம் இந்த இடத்தை விட்டு நகர்” என அதட்டவும் செய்தேன்.

“ என்னை மன்னியுங்கள் ஐயா !, தவறான விலாசத்துக்கு வந்து விட்டேன் என நினைக்கிறேன் “ என மிகப் பணிவாகக் கூறி சட்டென அவ்விட்த்தில் இருந்து மறைந்து போன அவர், இனி மேல் என் திசை நோக்கி வரவே மாட்டார் என நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். நன்றாக உரு மாறிவிட்ட என்னை அடையாளம் காணவில்லை என்றே நான் நம்பினேன்.

இந்த சம்பவம் நடந்து சில காலத்தின் பின்னர் கிராமத்தில் நான் படித்த பாடசாலையின் பழைய மாணவர் சங்கக் கூட்டம் பற்றிய அழைப்பைப் பார்த்த போது, கலந்து கொள்ள ஆர்வம் தலை தூக்கியது. கூட்டம் முடிந்ததும், அம்மாவால் வீடு என்று அழைக்கப்பட்ட அந்த சிறு கொட்டிலைப் பார்க்க ஏனோ மனம் எண்ணியது. சரி ஒரு எட்டுப் பார்க்கலாம் என விரைந்தேன்.

குடிலினுள் குளிர்ந்து போன கட்டாந்தரையில் என் அம்மா வீழ்ந்து கிடந்தார், எனக்குள் சிறு பதட்டமும் இல்லை, மெல்ல அருகில் சென்றேன், கையில் சுருட்டிய ஒரு கடதாசி....... ஆம் அவர் எனக்கு எழுதியிருந்த கடிதம் அது.


அன்பு மகனே.....என் இந்த உலக வாழ்வு இத்துடன் போதும் என நினைக்கிறேன், உன்னைப் பார்க்க உன் வீட்டுக்கு இனிமேல் நான் வர மாட்டேன், ஆனால் நீயாவது எப்போதாவது என்னை வந்து பார்த்துவிட்டுப் போக மாட்டாயா ? , உன்னை எவ்வளவு நான் நேசித்தேன் என்றும், எத்தனை தூரம் உன் பிரிவினால் துன்பப்பட்டேன் என்றும் சொல்ல முடியாது. பாடசாலை கூட்டத்துக்கு நீ வருவதை எப்படியோ அறிந்து கொண்டேன். அங்கு வந்து உன்னை அவமானப் படுத்த மாட்டேன், இக் கடிதத்தை உன்கையில் எப்படியாவது சேர்த்து விடுவேன் மகனே.

நீ குழந்தையாக இருந்த போது, ஏற்பட்ட ஒரு விபத்தில் உன் ஒரு கண் பறிபோனது. ஒற்றைக் கண்ணுடன் என் மகன் வளரப் போவதை ஒரு தாயாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை...........அதனால் என் ஒரு கண்ணை உனக்கு ஈந்தேன்.

இன்று நான் மிகவும் பெருமையாக உள்ளேன், என் கண்ணால் முழு உலகத்தையும் என் மகன் பார்க்கிறான், படிக்கிறான், இத்தனை உயர்ந்த நிலைக்கு அவன் வர இதைவிட பெரிய உதவி என்னால் செய்திருக்க முடியாது. நீ வெறுத்த போதெல்லாம் நான் கோபப்படவில்லை என் மகனே... என்னிடம் இருக்கும் பாசத்தினாலே தான் நீ என்னைடம் உரிமையாகக் கோவிக்கிறாய் ...............”

குனிந்து பார்க்கிறேன், அவர் இரு கண்களும் மூடியுள்ளன.............

அம்மா.............என் அம்மா, முதல் தடவையாக கண்களில்ருந்து கண்ணீர் உருள்கிறது என் அம்மாவுக்காக.

12 comments:

பூமிக்கு, நதிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு பங்கையாவது பெற்ற தாய்க்கு கொடுப்போமே! அவளை நாம் போற்றாவிட்டால் வேறு யார்தான் போற்றுவார்கள்?

இன்றைய பட்டிமன்ற தலைப்பு என்னை பதிததைவிட தீர்ப்பு மிகவும் மிகவும் பதித்தது.

Priyam.. Ithu Thaan Siru Kathaya??? Superu... Romba Periya Kathainga!!

Thaaikku Pin Thaan Thaaramnu Solli irukaangalay thavira... Chat la antha tharappu la pesina Thaarathuku Pinaadi Oliyum aanmagangalnu yaaarumay sollalai!!!

ஒரு குழந்தையை பெற்றெடுக்க / வளர்க்க அதீத கஷ்டப்படுகிற ஒரே ஜீவன் உலகத்தில் தாய்தான்.

அதே குழந்தை வளர்ந்து ஆளானதும், அந்தக் குழந்தையின் கல்விக்காக ஒரு பெரிய போராட்டமே நடத்துகிறாள். அணிந்திருக்கும் ஒன்றிரண்டு நகைகளை விற்றுக் கூட குழந்தையைப் படிக்க வைக்கிறாள்.

குழந்தை படித்து முடித்து நல்ல நிலைக்கு வந்ததும் திருமணமும் செய்து வைக்கிறாள். திருமணத்திற்குப் பிறகு அவளுக்கு பெற்ற குழந்தையின் ஆதரவு இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

தனது பிள்ளைக்கு நல்லது நடக்கும் என்றால், அதற்காக தனது உயிரையே கொடுக்க துணிபவள்தான் உண்மையான தாய்.


இன்று நீங்கள் இந்த சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்றால், உங்கள் தாயை மனதார வாழ்த்துங்கள். உங்களை இந்த அளவுக்கு ஆளாக்கிய அந்த தாய்க்கு நன்றி செலுத்துங்கள்.

எந்த தாயும் தனது குழந்தை நல்ல வழியில் செல்ல வேண்டும், பிறர் போற்றும்படியாக வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவாள். இதற்கு விதிவிலக்காக ஒரு சில தாயும் இருக்கலாம். இதுபற்றி விரிவாக அலச தேவையில்லை.

நன்றி நண்பர் கார்த்திஸ் மற்று நண்பர் வெர்ஸடெய்ல், கார்த்திஸ் உங்களின் கருத்து நியாயமனாதே ஒட்டுமொத்த தாய்மார்களில் ஒருசில விதிவிலக்கினை தவிர்த்து பார்த்தால் .. தாயில் சிறந்த கோவிலும் இல்லை என்பது நிரூபனமாகும்

enna oru aathmarthamaana karutthu, kandippaaga, unmayaaga ,sathiyamaaga ithai ezhuthiyavarkku en ithayam kanintha nandri

நன்றி சுரேந்தர், உன் தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது - நபிகள் நாயகம்

பிரியமுடன் தங்கள் சிறு கதையை படித்து முடித்தவுடன் என் கண்களில் நீர் துளி ததும்பியது , மற்ற உறவுகள் எல்லாமே ,கணவன்
,மனைவிமுதற் கொண்டு ஒருத்தர் மேல் ஒருத்தர் எதிபார்ப்பு வைத்து கொண்டு தான் வாழ்கிறோம்,இருவருக்கும் எதிபார்த்தது கிடைக்கவில்லை என்றல் கோபம் வருகிறது ஆனால், பிறத்தது முதல் என்று வரை நம்மிடம் எதிர்பார்ப்பும் இல்லாமல், நம் கஷ்டம்,மகிழ்ச்சி, நம் கொடுக்கும் துயர்கள் ஆகியவற்றில் பங்குகொண்டு,தாங்கிகொண்டு, நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது பெற்ற அன்னையை தவிர வேறு யாரும், எந்த உலகில் நினைப்பது இல்லை.அவர்கள் இறந்த பின்பு அவர்களின் தியாகத்தை உணர்வதை விட ,அவர்கள் இருக்கும் போது உணர்த்து மகிழ்ச்சியாக வைத்து இருபது நம் கடமை. தங்களின் பதிவு என்னை மிகவும் சிந்திக்க வைத்தது, எது போன்ற பதிவுகளை தங்களிடம் மென்மேலும் எதிர்பாக்கிறேன் நன்றி வணக்கம்.

லக்ஷ்சு தங்கள் கருத்துக்கு நன்றி!

Tholare, thaayai patri sinthikka oru arumaiyana sirukathaiyai inge pathivu seythu ulleerkal. nandri. Thaay enbaval uyirodu kalantha uravu... thaaram enbaval unarvodu kalantha pen thozhi enbathi inge pagirnthukolla virumbukiren.

நன்றி சூர்யா, தங்களின் கருத்து ஏற்கத்தக்கது.

ithu oru sirukathai alla, oru periya thiyagam. ithai ingu pathivu seithamaikku mikka nandri, priyamudan!

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More