Blogroll

Sunday, July 24, 2011

இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா?


இந்த பொண்ணுங்களே இப்படித்தான் குத்துங்க எசமான் குத்துங்க. இப்படி ஒரு வசனம் ஒரு திரைப்படத்தில் வரும்.
அந்த வசனம் பாலியல் ஒழுக்கம் சம்பந்தப்பட்டது. இங்கே நான் சொல்லப்போவது....................சம்பந்தப்பட்டது.

பெண்கள் ஏன் நகை அணிகிறார்கள். தங்களை அழகாக காட்ட. உண்மையில் நகை ஒரு கவர்ச்சி பொருள். நகை அணியும்பொழுது அவர்கள் இன்னும் அழகாக கவர்ச்சியாக இருக்கிறார்கள். இதற்காகத்தான் அவர்கள் நகைகள் உபயோகிக்கிறார்கள் என நான் நினைக்கின்றேன். தன்னுடைய வசதியை காட்டுவதற்காகவும் பலர் நகை அணிகின்றனர். நகை அணிவதை ஒரு கௌரவமாகவே பலர் நினைக்கின்றனர்.

நகைகளை அணிவதும் அணியாமல் இருப்பதும் அவர் அவர்களது சொந்த பிரச்னை. இதைப்பற்றி நான் எழுதுகிறேன் என்று நீங்கள் கேட்கலாம்.

இன்று காலையில் ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன் ஒரு பெண்ணின் ஏழரை பவுன் தாலி சங்கிலியை இரு திருடர்கள் பறித்துக்கொண்டு போய்விட்டனர். அதுமட்டுமா பறிக்கும்போது அவரது கழுத்தில் வேறு பயங்கர காயம் ஏற்ப்பட்டு விட்டதாம்.

இதை கேட்டவுடன் முதலில் எனக்கு அந்த திருடர்கள் மீதுதான் கோபம் வந்தது. இப்படிப்பட்டவர்களின் இரு கைகளையும் துண்டிக்க வேண்டும். சில பகுதிகளில் இன்னும் திருடர்கள் நடமாடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இதே பகுதியில் ஒரு நான்கு வருடத்திற்கு முன்பு இதே போல் ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன். இவையாவும் எனக்கு ஏதோ ஒரு முறையில் தெரிந்தவர்களுக்கு நேர்ந்ததால் எனக்கு தெரிந்த செய்திகள். எனக்கு தெரியாமல் எத்தனை திருட்டு நடந்ததோ தெரியவில்லை.

திருடர்களிடமிருந்து காத்துக்கொள்ள நாம் தானே ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். பெண்கள் அதிகமாக நகை அணிவதால் அவர்கள் உயிருக்கே உலை போன கதைகள் நாம் செய்தித்தாளில் படிக்கிறோம்.

இப்படி இருக்கம் பட்சத்தில்

பெண்கள் நகை அணிந்து தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும்.
துணையுடன் சென்றாலும் திருட்டு சம்பவம் நடப்பதாக தெரியும் இடங்களில் இரவு நேரங்களில் உலாவுவதை தவிர்த்தல் நல்லது.
வீட்டிற்குள் எவ்வளவு வேண்டுமானாலும் நகை அணிந்து அழகாய் இருங்கள் அது தவறில்லை.
பொதுவாக நகைகளின் மேல் உள்ள மோகத்தை குறைப்பது நல்லது. மூலதனமாக வேண்டுமானால் அதை அதிகமாக உபயோகியுங்கள்.
நகையினால் வரும் அற்ப கௌரவம் எதற்கு? நடத்தையால் வரும் கௌரவம் தானே அழகு?


நான் கேள்விப்பட்ட இரண்டு சம்பவங்களும் காலை நேரத்தில் தான் நடந்தது. குற்றம் அதிகமாக நடுக்கும் இடத்தில் நீங்கள் வாசிப்பீர்கள் எனில் அதிகாலை நேரத்திலும் கவனம் தேவை.

இப்படிப்பட்ட இடங்களில் இன்னும் காவலை அதிப்படுத்துவார்கள் என நம்புகிறேன். இருப்பினும் நம்மை காப்பாற்றி கொள்ள முதல் வேலையே நாம் தான் செய்ய வேண்டும்.

திருடர்களை திட்டாமல் பெண்களை குறை சொல்வதை சிலர் கையாலாகாத தனமாக கூட நினைக்கலாம்.
திருடர்களை களைய வேண்டும் அதுதான் முக்கியம். அதே நேரத்தில் திருட நாம் அவர்களுக்கு வாய்ப்பும் தந்துவிட கூடாது. இது ரொம்ப முக்கியம்.

பெண்களே புன்னகை இருக்க பொன் நகை ஏன்? பொன் நகை போனால் புன்னகையும் சேர்ந்தல்லவோ போய்விடுகிறது?

சிந்தியுங்கள்....சிறப்பாக வாழுங்கள்




0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More