Blogroll

Wednesday, September 7, 2011

கேரமேல் புட்டிங்


கேரமேல் புட்டிங்


நேற்று ஒரு சிக்கன் சமையல் பார்த்தோம், இன்று ஒரு ஸ்வீட் செய்து பார்க்கலாம்.கேரமேல் புட்டிங் செய்ய மிகவும் எளிமையானது, நல்ல சுவையடணும் இருக்கும்.




தேவையான பொருள்கள்;

பால்---அரை லிட்டர்
கஸ்டர் பவுடர் ---இரண்டு மேஜை கரண்டி
முட்டை ---இரண்டு
சக்கரை---ஐந்து மேஜை கரண்டி [ஸ்பூன்]
கோண்டேன்செத் மில்க் ---கால் டின்
வனிலா எஸ்சென்ஸ் ---இரண்டு துளி



கேரமேல் செய்யும் முறை;

ஒரு அகண்ட அலுமினிய கடாயை நீர் இல்லாதவாறு துடைத்து கொள்ள வேண்டும்.

பின்பு அதில் சக்கரையை எல்லா பக்கமும் தூவிவிட வேண்டும் சீராக.

பின்பு அடுப்பில் மெல்லிய தணலில் வைத்து கடாயை எடுக்கி யால் பிடித்து சக்கரை உருகி பத்திரத்தில் அணைத்து இடத்திலும் பரவும் படி செய்யவேண்டும்.

அடுப்பில் இருந்து கீழே வைத்து ஆறவிட வேண்டும், எப்போது கேரமேல் தயார் ஆகி விட்டது .


புட்டிங் செய்யும் முறை


மிக்ஸ்யே ஜாரில் சக்கரை,முட்டை,கஸ்டர்ட் பவுடர் ,வனிலாஎஸ்சென்ஸ் போட்டு நன்றாக சக்கரை கரையும் வரை அடிக்கவும்.


எப்போது பால் மற்றும் கோண்டேன்செத் மில்க் அதில் ஊற்றி அடிக்க வேண்டும்.

எந்த கலவையை ஆறிய அலுமினிய பாத்திரத்தில் மேல் இருக்கும் கேரமேல் மேல் ஊத்த வேண்டும்.


எப்போது
கூக்கரில்
நான்கு கிளாஸ் தண்ணீர் விட்டு ஒரு பத்திரத்தை திருப்பி போட்டு அதன் மேல் நம் தயார் செய்து வைத்து இருக்கும் கலவையை வைத்து ஒரு தட்டை போட்டு மூட வேண்டும். எபோது கூகரைமூடி மெலிய தணலில் இருபது நிமிடம் வேக விடவும்.


நன்றாக வெந்த பிறகு அந்த கலவையை கூக்கரில் இருந்து வெளியே அடுத்து நன்றாக ஆர விட வேண்டும். பின்பு ஒரு பெரிய பிளாட்டை, அலுமினிய பத்திரத்தின் மேல் வைத்து திருப்பி விட வேண்டும் .எப்பொழுது சுவையான கேரமேல் புட்டிங் சாப்பிட ரெடி.

செய்து சாப்பிட்டு விட்டு எப்படி இருக்கிறது என்று கூறுங்கள்,நன்றி வணக்கம்

0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More