Blogroll

Wednesday, September 7, 2011

பழம் மற்றும் காய்கறிசாலட்



பழம் மற்றும் காய்கறி
************************
சாலட்

********


பொதுவாக சாலட் வகைகளை அனைவரும் விரும்பி உண்ண மாட்டார்கள், ஆனால் நாம் எப்போது பண்ண போகும் சாலட் அனைவரையும் மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்ற வைக்கும்.



தேவையான பொருள்கள்
*****************************

ஆப்பிள் ---- ஒன்று

மாதுளை ---- ஒன்று [பெரியது ]

நாட்டு பேரிக்காய் ---இரண்டு

காரட் --- இரண்டு

வெள்ளரிக்காய் பிஞ்சு ---ஒன்று

கருப்பு மிளகு பொடிதேவையான அளவு

லெமன் ---ஒன்று [பெரியது]

உப்பு தேவையான அளவு

************

தேவைபட்டால் [ஒப்சினல்]

ஒலிவ் ஆயில் /சாலட் ஆயில் --- அரை ஸ்பூன்.


செய்முறை
**************


காரட் ,வெள்ளரி பிஞ்சு முதலியவற்றை பொடியாக நறுக்கிகொள்ள வேண்டும்.


பின்பு மாதுளை உரித்து அதில் போட்டு, கடைசியாக தான் ஆப்பிள் மற்றும் பேரிக்காய் போன்றவை பொடியாக நறுக்கி எந்த கலவை யில் சேர்க்கவேண்டும் இல்லை என்றால் கருபாகிவிடும்.

எப்போது லெமன்,தேவையான அளவு உப்பு,மிளகு பொடி சேர்த்து, கைகளால் பிசறி விட்டு கொள்ளுங்கள் ,உங்களிடம் இருந்தால் சாலட் ஆயில்/ஒலிவ் ஆயில் அரை ஸ்பூன் சேர்த்து கொள்ளுங்கள், இல்லை என்றாலும் சுவை ஒன்றும் மாறது.


எப்போது சுவையான மற்றும் சத்தான சாலட் தயார்,மேலும் மேலும் உண்ண ஆவலை தூண்டும், செய்வதற்கும் மிக எளிமையானது .


***********************



2 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More