Blogroll

Sunday, September 11, 2011

கல்யாணம் செய்யப்போறீங்களா



திருமணம் செய்வதற்காக பத்து பொருத்தங்கள் பார்க்கிறோம்.ஜாதகம் பார்க்கிறோம்.குடும்ப நிலை,பையன்,பெண் படிப்பு எல்லாவற்றிலும் கவனம் செலுத்துகிறோம்.உடல் தகுதிகளைப் பற்றி போதுமான விழிப்புணர்வு நம்மிடம் இல்லை.திருமணத்திற்கு முன்பு மணமக்கள் ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.


ரத்த வகை அறிவதில் பலருக்கும் ஆர்வம் இருப்பதை பார்த்திருக்கிறேன்.இதில் ஆர்.எச் வகை என்று உண்டு.பாசிட்டிவ்,நெகடிவ் என்பது இதுதான்.பலரும் கர்ப்பத்துக்குப்பின் பரிசோதனையில் இதை கண்டு பிடிப்பார்கள்.தாயும்,தந்தையும் வேறுவேறு வகை ஆர்.எச்.அம்சங்களை கொண்டிருந்தால் இரண்டாவது குழந்தை மரணமடையும் வாய்ப்புண்டு.


பெற்றோருக்கு இப்போது ரத்தப்பரிசோதனை மூலம் கர்ப்பத்தின் போது கண்டுபிடிக்கப்படுவதால் சிகிச்சை மூலம் இதை சரி செய்கிறார்கள்.திருமணத்திற்கு முன்பே இப்பரிசோதனைகள் அவசியம் என்பதே சரியானது.நெகட்டிவ் அம்சம் இருப்பவர்களுக்கு செவ்வாய் தோஷம் இருக்கும் என்ற கருத்தும் உண்டு.

முக்கியமானது.ஹெபட்டிஸ் பி,சி வகை.
ஒருவருக்கு ரத்தம் செலுத்துவதற்கு முன்பு இவ்வகை வைரஸ் உள்ளதா எனவும் பரிசோதனையும் செய்வார்கள்.கிட்ட்த்தட்ட எய்ட்ஸ் வைரஸை போன்றே பரவும் தன்மை கொண்ட்து.பலருக்கு அறிகுறி இருக்காது.பரிசோதனை மூலம்தான் தெரியும்.மணமக்கள் யாருக்கேனும் இருந்தால் தவிர்த்து விடுவதே சரி.தவிர கொஞ்சம் அப்படி இப்படி பழக்கம் உள்ளவர்களாக இருக்கவும் வாய்ப்புண்டு.(பாலுறவு மூலம் பரவும்).


ஹெபடைடிஸ் பி வகைக்கு தடுப்பூசி இருக்கிறது.கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஊசி போட்டு வரும் முன் காக்கலாமே தவிர வந்த பின்னால் இந்த வகை நாட்டு மருந்தால் குணமாவதாக நான் கேள்விப்படவில்லை.ஆங்கில மருத்துவத்திலும் இல்லை.வைரஸ் நோய்களை முழுமையாக குணமாக்க மருத்துவம் இல்லை.


அடுத்து எய்ட்ஸ் பரிசோதனை.செய்யச்சொன்னால் யாரும் விரும்ப மாட்டார்கள்.பல ஆண்டுகளுக்கு அறிகுறி வெளியே தெரியாது என்பதால் அவசியம் செய்து விடுவதே நல்லது.வேறு சில குணமாக்க முடியாத பால்வினை நோய்களும் உண்டு.உரிய மருத்துவர் மூலம் திறன் உள்ளிட்ட முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது பல பிரச்சினைகளைத் தவிர்க்கும்.


திருமணத்திற்கு முன்பு உடல் பரிசோதனை இன்றைய சூழலில் பொருத்தம் பார்ப்பது போன்று அவசியம் மேற்கொள்ள வேண்டிய ஒன்று.மெத்தப்படித்த ஆண்கள்தான் இதை முன்னெடுத்துச்செல்ல முடியும்.ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கையையும்,குழந்தைகளையும் இதனால் நாம் பெற முடியும்.

0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More