Blogroll

Saturday, September 10, 2011

கோழி மிளகு கறி[சண்டே ஸ்பெஷல் ]


கோழி மிளகு கறி
*************************

கோழி மிளகு கறிசெய்வது மிக எளியது, ஆனால் ருசியோ அருமையாக இருக்கும். இது ரசம் சாதம் ,தண்ணி வெங்காய சாம்பார்,சப்பாத்தி ஆகியவற்றுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.நேற்று இரவு நான் பண்ணினேன் பிரமாதமான சுவையுடன் இருததாக ருசித்தவர்கள் கூறினார்கள்,அதனால் நண்பர்களே உங்களுடன் எதை பகிர்த்து கொள்கிறேன்.


தேவையான பொருகள் ;
******************************

கோழி ----- அரை கிலோ

சின்ன வெங்காயம் --- இருவதிஐந்து

சோம்பு ---அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் ---பத்து

பூண்டு ---பத்து பல்

இஞ்சி ---கால் துண்டு

நாட்டு தக்காளி ---- ஒன்று [சின்னது]

கருப்பு மிளகு பொடி ---- இரண்டு ஸ்பூன்

நல்லண்ணை ---இரண்டு கரண்டி

கறிவேப்பிலை ---ஒரு கொத்து


செய்முறை
*********************



கூகரில் நல்லெண்ணெய் ஊற்றி,சோம்பு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.

வெங்காயம் வதகியவுடன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

பின்னர் மஞ்சள் துள் ,பச்சை மிளகாய் வட்டமாக நறுக்கியதையும் போட்டு வதக்க வேண்டும்.

எப்போது கோழி, நாட்டு தக்காளி போட்டு வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து,அரை டம்ளர் தண்ணீர் விட்டு கூகரை மூடி இரண்டு விசில் விடவும்.

பின்னர் விசில் அடக்கியவுடன்,கூகரை அடுப்பில் சிறு தணலில் வைத்து மீதி இருக்கும் நீர் வற்றும் வரை வதக்கவும்.

நீர் வற்றியவுடன் மிளகு, கறிவேப்பிலை சேர்த்து, மிளகின் பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.


எப்போது சுவையான கோழி மிளகு கறி ரெடி,சேது சாப்பிட்டு விட்டு எப்படி இருக்கிறது என்று கூறுங்கள்.

நன்றி வணக்கம்!
******************************





0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More