Blogroll

Saturday, September 17, 2011

தொப்பையைக்குறைக்க என்னதான் வழி?

தொப்பையையும் போலீஸையும் தொடர்புபடுத்திதான் நிறைய ஜோக்ஸ் உண்டு.உண்மையில் தொப்பை போலீஸுக்கு மட்டுமா இருக்கிறது? திருடனைப்பிடிக்க காவலர்கள் அப்படி வயிற்றைத்தள்ளிக்கொண்டு இருக்க்க்கூடாது என்பதால் அப்படி கிண்டல்.மற்றபடி பெரும்பாலானவர்களுக்கு உள்ள ஒரு பிரச்சினைதான்.

இடுப்பில் சதை போடுபவர்கள் கொஞ்சம் அதிகம்தான்.இன்றைய உணவு முறையும்,உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறையும் ஒரு காரணம்.சிலருக்கு குழந்தைகள் சறுக்கி விளையாடும் அளவுக்கு முன்னால் துருத்திக் கொண்டு இருக்கும்.பலரும் இதை சங்கடமாகவே உணர்கிறார்கள்.



என் நண்பர் ஒருவருக்கு இன்னொரு நண்பர் தொப்பையை செல்போனில் படம் எடுத்துக்காட்டி கேலி செய்வது வழக்கம்.அவருடைய பையனும் தொப்பை மாமா என்று கூப்பிட பழகிவிட்டான்.பத்து பேர் கூடியிருக்கும்போதும் உற்சாகமாக இப்படி அழைப்பான்.நண்பர் நெளிவார் பாவம்.

அவருக்கு நான் சொல்வது..முதல் வேலையாக கவலைப்படுவதை நிறுத்துங்கள்.அதுவே பின்னர் பிரச்சினை ஆகிவிடும்.அப்புறம் மன அழுத்தமாக மாறி சாப்பிடுவதில் அதிகமாகவோ,குறைவாகவோ போய் உடலுக்குக் கேடு.அவனுக்கு சமாதானமாகவில்லை.எனக்கு தெரிந்த மருத்துவரிடம் கேட்டோம்.



உங்களுக்கு தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள் ஏன்று கிண்டலடித்தவர்,உடலில் கொழுப்பு அதிகமானால் ஏதோ ஒரு இட்த்தில் ஒதுங்கவே செய்யும்.உங்கள் வயிறு அதற்கு பிடித்துப்போய் விட்ட்து என்றார்.முதலில் அரிசி உணவையும்,அதிக கொழுப்புள்ள உணவையும்,இனிப்பு பண்டங்களையும் குறைத்துகொள்ளவேண்டும் என்றார்.துரித உணவுகள் தொப்பையின் நண்பன்.

பெரும்பாலானவர்களுக்கு பரிந்துரைப்பது உடற்பயிற்சிதான்.தினம் அரை மணி நேரமாவது வேகமாக நட்த்தல்,சைக்கிளிங் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்வது அதிக பலன் அளிக்கும் புதியதாக தொடங்குபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்வது நல்லது.குறைவான கலோரி கொண்ட உணவுகளை தேர்ந்தெடுப்பது நல்லது.முடிந்தால் உணவியல் நிபுணரை ஆலோசித்து உங்களுக்கேற்ற உணவுகளை தீர்மானிக்கலாம்.



மேலும் சில குறிப்புகள்.

· பழங்கள்,காய்கறிகள் அதிகம் சேர்க்கவும்.
· கொழுப்பு நிறைந்த,துரித உணவுகள்,இனிப்புகள் தவிர்க்கவும்.
· குளிர்பான்ங்களை விலக்கி எலுமிச்சை போன்ற சாதாரண பழரசங்களுக்கு மாறவும்.
· உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளவும்.
· வயிற்றில் மூன்றில் ஒருபகுதி காலியாக இருக்கட்டும்
· ஒருபகுதி நீரும்,இன்னொரு பகுதியில் உணவும்.
· கூடுமானவரை வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

மேற்கண்ட தகவல்கள் உங்களுக்கு ஓரளவு உதவும்.முயன்றால் நிச்சயம் முடியும்.

0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More