Blogroll

Friday, September 30, 2011

உணவு.. உடை.. இருப்பிடம்.. இன்டெர்நெட்



ஒரு மனிதன் வாழ அத்தியாவசிய தேவை உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம்.. இது கடந்த காலங்களில்.. தற்போது இதனுடன் ஒன்று புதிதாக இனைந்துள்ளது.. ஆம்.. இன்டெர்நெட்...

இன்றைய இணைய உலகில் ஐம்பதை தாண்டிய பெரிசுகளே காதில் ஐபாடும், கையில் செல்போனுமாக திரிகிறபோது இளைஞர்களை பற்றி கேட்கவா வேண்டும்? காற்று, தண்ணீர், உணவை விட இன்டர்நெட் தேவைதான் இன்றைய இந்திய இளைஞர்களுக்கு மிக அத்தியாவசிய தேவையாகிப்போனதாக தெரிவிக்கிறது ஆய்வு ஒன்று.

முன்பாவது இணையத்தில் உலாவர கம்ப்யூட்டர், அதன் பின்னர் லேப்டாப் என தேவையாக இருந்தது. ஆனால் இப்போது கையில் உள்ள 5 அங்குல மொபைல்போனிலேயே ஒட்டுமொத்த உலகையும் இழுத்துவந்துவிடுகிறது இணையம்.

கல்லூரி செல்லும் மாணவ,மாணவிகள்,பணிக்கு செல்லும் இளைஞர்கள்...அவ்வளவு ஏன் பள்ளிக்கு செல்லும் பையன்கள் கூட இன்டர்நெட் இணைப்புடன் கூடிய மொபைல்போன் சகிதமாகத்தான் உலா வருகின்றனர். ஆனால் அந்த இணைய இணைப்பை பயன்படுத்திக் கொள்வதில்தான் நபருக்கு நபருக்கு மாற்றம்!

இந்நிலையில் இன்றைய இளைஞர்களிடம் இன்டர்நெட் பயன்பாடு எந்த அளவில் உள்ளது என்பது குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

இதில் ஐந்துக்கு நான்கு கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளவயது பணியாளர்கள், இன்டர்நெட் தங்களுக்கு முக்கியமானது என்றும், தங்களது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமானது என்றும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, பிரேசில்,பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த 1,441 கல்லூரி மாணவர்கள் (18 முதல் 24 வயதுடையவர்கள்) மற்றும் 1,412 இளவயது பணியாளர்களிடம் (21 முதல் 29 வயதுடையவர்கள்) இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

1 comments:

The Biggest Gaming Casinos (2021) - DRMCD
The 의왕 출장안마 Biggest Gaming Casinos (2021) · Top 10 · Microgaming · Big Win · Golden 평택 출장안마 Tiger 화성 출장안마 · 전라북도 출장안마 Microgaming · LeoVegas · Microgaming · Jackpot Magic · Play'n GO · 오산 출장샵 Microgaming · Play'n GO

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More