Blogroll

Friday, September 2, 2011

மகிழ்ச்சி பறிபோனது


ஒர் ஊரில் அடுத்தடுத்து செல்வன் ஒருவனும் எழை ஒருவனும் குடியிருந்தார்கள். செல்வனின் வீடு பெரிதாக இருந்தது. எழையின் வீடோ குடிசை வீடு. எழைக்கு சொந்தமாக நிலம் ஏதும் கிடையாது. யார் வயலிலாவது உழைத்து கிடைக்கின்ற சிறிதளவு கூலிவுடன் வீடு திரும்புவான் அவன், எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருந்தான். அவன் வீட்டு கதவு எப்பொழுதும் திறந்தே இருக்கம் படுத்தவுடன் தூங்கி விடவான் அவன். ஆனால் செல்வனோ எப்பொழுதும் பரபரப்புடனம் கவலையுடனும் காட்சி அளித்தான். தன் வீட்டு ஜன்னர்களையும் கதவுகளையும் மூடியே வைத்திருந்தான் அவன் திருடர்கள் வீட்டினுள் நுழைந்து விலை உயர்ந்த பொருள்களை திருடிச் சென்று விடுவார்களோ என்று அஞ்சினான். ஆதனால் அவன் இரவில் தூங்குவதே இல்லை. ஏழை எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கவனித்தான் அவன் இவ்வாறு செல்வம் இருந்தும் தன்னால் அவனைப் போல் மகிழ்ச்சியாக இருக்க முடியவில.;லையே என்று வருந்தினான். ஏழையிடம் செல்வம் இருந்தால் என்ன நடக்கும் என்பதை அறிய விரும்பினான் அவன். ஏழையை அழைத்த அவன் நண்பனே உன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன், நீ வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறாய் உனக்கு உதவி செய்ய நினைக்கிறேன் என்னிடம் செல்வம் உள்ளது அதிலிருந்து உனக்கு 100 பொற்காசுகள் தருகிறேன் நீ மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்து என்றான். அவனிடம் நூறு பொற்காசுகள் பெற்றுக் கொண்ட எழை மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தான். இரவு வந்தது. திருடர்கள் பொற்காசுகளைத் திருடிச் சென்று விடுவார்களோ என்ற அச்சத்தால் கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டான். தூங்கும்போது திருடர்கள் வந்தால் என்ன செய்வது என்ற கவலையில் இரவு முழுவதும் அவன் தூங்கவில்லை. சிறு ஒசை கேட்டாலும் அஞ்சி நடுங்கினான் அவன். தன் மகிழ்ச்சி பறிபோனதற்கு காரணம் பொற்காசுகள் தான் என்ற உண்மையை உணர்ந்தான் அவன். பொழுது விடிந்தது பொற்காசுப் பையை எடுத்துக் கொண்டு செல்வனின் வீட்டிற்கு வந்தான். ஐயா நான் ஏழைதான். உங்கள் பொற்காசுகள் என் அமைதிளையும் மகிழ்ச்சியையும் குலைத்துவிட்டன எனக்கு வேண்டாம் இந்தப் பொற்காசுகள் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று அவனிடம் தந்துவிட்டு மகிழச்சியுடன் புறப்பட்டான் அவன்.

0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More