Blogroll

Saturday, August 27, 2011

நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.


இறையே இறையே அருள் இறையே!
உன் புகழ் பாடுது திருமறையே!
மறையே மறையே அருள் மறையே!
மாநபி கொண்டுவந்த திருமறையே!

ஆகுக என்னும் ஒரு சொல்லால்
அகிலத்தை படைத்த அருள் நீயே!
ஆதியும் அந்தமும் உண்டாக்கி
அதிலுன் கருணையைத் தேக்கி

பார்த்துக்கொள்ளும் பண்பாளனும் நீயே!
பாதங்கஞ் செய்வோர்களின் பாவங்களை
மன்னிதருள்பவனும் நீயே!-அதேசமயம்
பாவத்தின் நிலைபொறுத்து
தண்டிப்பவனும் நீயே!

மாநபிகள் பலரையுமே
மண்ணில் படைத்தவனும் நீயே!
மாபெரும் அருள்களும்
மனமுவந்து கொடுத்தவனும் நீயே!

மகத்தான பலசெயல்கள்
செய்ய வைத்தவனும் நீயே!
மன்னிப்பு தருவதையே
மாண்பாக்கித் தந்தவனும் நீயே!

ஒருதுளி நீரில் மனிதயினம்
உருவாக்கிய உன்னத அருள் நீயே!
உயிர்களின் தேவைகள் தான்அறிந்து -இந்த
உலகையே தந்த உயர் நீயே!

கடல்தாண்டி மலைதாண்டி
கானத்தின் நிலம்தாண்டி
காக்கும் காவலனும் நீயே
கவலையைத் தீர்க்கும்
மருந்தும் தருவாயே!

வானத்தில் சுற்றி வரும்
சூரியனும் சந்திரனும்-அதில்
வலம்வரும் நட்சத்திரமும்கூட – உன்னை
வணங்காமல் இருந்ததேயில்லை -நீயிடும்
கட்டளையை கேட்காமல் விட்டதுமில்லை

பிறப்பையும் இறப்பையும் வைத்து-இப்
பூமியை புனிதமாக்கியவனும் நீயே!
படைப்பினங்களை சிறப்பாக்க -இந்த
பூலோகத்தை
பூரிப்படைய வைத்தவனும் நீயே!

அகிலத்தை ஆட்சி செய்பவனும் நீயே
அண்ட சராசரத்தின் அதிபதியும் நீயே!
உலகிலுள்ள அனைத்தின் மீதும்
அதீதசக்தி பெற்றவனும் நீயே!

உனதருள் வேண்டியே!
மரணம்வரும் வேளைவரை
மண்டியிட்டுக் கிடக்கவேண்டுமே
மனிதயினம்

நித்தம் நித்தம் தொழுதபடி
நோன்புகள் முப்பதும் பிடித்தபடி
ஜக்காத் நிறைய கொடுத்தபடி-முடிந்தால்
ஹஜ்ஜின் கடமையும் முடித்தபடி

உன்னை நினைக்க வேண்டுமே
இவ்வுலகம்
உன்நினைவிலேயே கரையவேண்டுமே
நொடியும் பொழுதும்
இம்மானிடம் முழுவதுவும்

ஈகை பெருநாளை இனிதாக
இன்பமாய் மகிழ்வோடு கொண்டாட
எல்லாம் வல்ல அருள்கொடையே
எங்களுக்கு நீ அருள்புரிவாய்

பாவங்கள் அனைத்தையும்
மன்னித்து
புனித சொர்க்கத்தை
எங்களுக்குத் தந்திடுவாய்..

அனைவருக்கும் எனது இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்களுடன்.. ப்ரியமுடன்

0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More