Blogroll

Wednesday, August 17, 2011

மனைவியை வெல்லும் மந்திரங்கள்!




அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்குள் இணக்கமான சூழல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்றைக்கு பல நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன. எட்டுமணிநேர வேலைக்கே இத்தனை மெனக்கெடல் இருக்கும் நிலையில் அதிகாலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை இணைந்தே இருக்கும் மனைவிக்கு என்னென்ன செய்யவேண்டும் என்று உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அலுவலக டென்சன்

அலுவலகத்தில் டென்ஷனை சந்தித்தாலும் அதை அலுவலகத்தோடு விட்டுவிடுங்கள். வீட்டில் உங்கள் மனைவி, பிள்ளைகளை மட்டும் நினையுங்கள், அலுவலகத்தில் உள்ள கோபத்தை எக்காரணம் கொண்டும் மனைவியிடம் பிரயோகித்து விடாதீர்கள்.

அலுவலகத்தில் இருந்து வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வீட்டில் மனைவியைபார்த்ததும் அவளை பாசத்தோடு கட்டித் தழுவுங்கள் (அருகில் யாரும் இல்லாத நேரத்தில்). சில முத்தங்களையும் கொடுங்கள். அவளும் தன் பங்குக்கு உங்கள் மீதுபாசத்தை கொட்டுவாள்.

சமையல் செய்யும்போது நீங்களும் மனைவிக்கு உதவி செய்யுங்கள். விடுமுறை நாளில்நான் சமைக்கிறேன் என்று சின்ன பொய்யையாவது சொல்லி முயற்சி செய்யுங்கள். நீங்கள் சொன்னதே போதும் என்று திருப்திகொள்வாள் உங்கள் மனைவி.

குழந்தையாக மாற்றுங்கள்

சாப்பிடும்போது ஒன்றாகவே சாப்பிடுங்கள். அப்போது மனைவிக்கு சாப்பாட்டைஊட்டி விடுவதில் தவறே இல்லை. அவ்வாறு செய்தால் அவள் ஒரு குழந்தை யாகவே மாறிவிடுவாள். அந்த குழந்தைத் தனத்தில் அவளது செய்கைகள் உங்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு போய்விடும். வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு ஒரு நாளாவது சினிமாவுக்கு அழைத்துச்செல்லுங்கள். சிரித்துப் பேசுங்கள், மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளுங்கள். வெளியில் மனைவியுடன் செல்லும்போது அவளை நெருங்கியபடியே செல்லுங்கள். முடிந்தால் அவளது கரத்தை பற்றிக் கொண்டே செல்லுங்கள். இந்த பாதுகாப்பை எல்லா பெண்களுமே கணவனிடம் எதிர்பார்ப்பார்கள்.

காதலும் புரிதலும்

சிலநேரங்களில், அவளே எதிர்பார்க்காத வகையில் பரிசுப் பொருட்களை வாங்கிக்கொடுத்து அசத்துங்கள். எதிர்காலம் பற்றி முடிவு எடுக்கும் போது உங்கள் மனைவியிடமும் விஷயத்தை சொல்லி, அவளது கருத்தை கேளுங்கள். அவள் அப்போது கூறும் அறிவுரைகளையும் பின்பற்றிப் பாருங்கள். செக்ஸ் விஷயத்தில் மட்டுமல்ல, எல்லா விஷயத்திலுமே உங்கள் மனைவியிடம் அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள்.

மற்றவர் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவதற்குப் பதிலாக முதலில் நீங்கள் மற்றவரை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். ஏனெனில் புரிந்து கொள்ளுதல் இல்லாததால்தான் எத்தனையோ குடும்ப உறவுகள் சிதைந்திருக்கின்றன. புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது.

துணைவர் மற்றும் மற்றவர்களின் உரிமைகள், ஆசைகள், தேவைகளை அறிந்து நடப்பதும், அவற்றை மதித்து அவருக்கு உதவுவதுமே புரிந்து கொள்ளல் ஆகும். மனைவி கணவரை மதிப்பதுபோலவே கணவரும் மனைவியை மதித்தால் குடும்பத்தில் பிரச்சினையே இல்லை. எந்த விஷயத்திலும் ஈகோ பார்க்காதீர்கள். இதைப்போய் நான் அவளிடம் கேட்க வேண்டுமா? என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களுக்காகவே வாழ வந்தவளிடம், நீங்கள் எந்த விஷயத்தையும் சொல்லலாமே! மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே!

சொர்க்கமாகும் இல்லம்

எக்காரணத்தைக் கொண்டும் கோபத்தை அவளிடம் வெளிப்படுத்தாதீர்கள். அப்படியே கோபப்பட்டாலும், உடனே சமாதான மாகிவிடுங்கள். அப்போது உங்கள் கோபத்தை நியாயப்படுத்திப் பேசாதீர்கள். ஏதோ தவறாக பேசிவிட்டேன். இனி கண்டிப்பாக பேச மாட்டேன் என்று சமாதானமாகவே பேசவேண்டும். பின் மனைவி தரப்பில்அமைதி ஏற்படுவதை உணரமுடியும்.

இப்படியெல்லாம் உங்கள் மனைவியை வைத்திருந்தால் உங்கள் இல்லமே ஒரு சொர்க்கலோகம் தான்.






0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More