Blogroll

Saturday, August 13, 2011

எப்போது வரும் சுதந்திர தினம்...??


வானமாய் வளர ஆசைதான்
அதற்கு
எங்களுக்கு வயிறு வளரவேண்டுமே....
கவலைகளோடும் கண்ணீரோடும்
கண் மூடிய பொழுதுகள் எங்கள்
தோள்களை தொடர்ந்து
உரசிக் கொண்டே வருகின்றன.....

பாதைகளில் பயணிக்க
இங்கு
பாதங்களோ பயணில்லாமல் கிடக்கின்றன!
பசுமையாய்க் கிடந்த வயலுக்கு
தீ வைத்த சங்கதி போல்
எங்கள் வாழ்க்கைக்கு தீ வைத்தது யார்?
கண்ணிற்குத் தெரியாத கடவுளா?
அல்லது
நாங்கள் சுவாசித்து விடும் காற்றை
சுவாசிக்கும் இந்த மானிடர்களா?




மீன்களுக்கு தவறாமல் உணவு போடும்
எம் மக்கள் எங்களை மீனை விட
அற்பமாக பார்ப்பது ஏனோ?
இது யார் செய்த குற்றம்....???
விதியை நொந்து எங்களைச் சுமந்த
எங்கள் தாயா?
உருவாகப் போகும் உயிர்களுக்கு
உணவிட வேண்டுமே என்பதை
நினைக்காமல் தன் பசியைப் போக்கி
எங்களை வீதியில் நிறுத்திய
எங்களின் தந்தையா?
படைப்பே பிரதானம் என்று
பாரபட்சம் பார்த்து வக்கத்தவர்களுக்கு
எங்களைக் கொடுத்த - இந்த
கடவுளின் குற்றமா? யார் செய்த குற்றம்?

மனசுக்குள் துடிப்பதை உதடுகள்
ஊமையாய் உரைக்கின்றன......
கண்களின் ஓரத்தில் அனுமதியில்லாமல்
கண்ணீர்த்துளி வெளியேறி
கன்னங்களை சுத்தமாக்குகின்றன....

எல்லா வழிகளும் இறுக்கமாய்
அடைபட்ட போதும்....- ஒரு
சிறிய மிட்டாய்க்காக இதயம்
ஏங்குகிறது....இப்போதைய பசிக்கு
அது போதுமே....!!! அது சரி
எப்போது வரும் சுதந்திர தினம்...??


Thanks - Pearlson Emmanuel


0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More