Blogroll

Monday, August 1, 2011

பயத்தம் பருப்பு தோசை

பயத்தம் பருப்பு தோசை .. செஞ்சிடுவோமா

வழக்கமான தோசை சாப்பிட்டு அலுத்துப் போனவர்கள் மாறுதலுக்காபயத்தம் பருப்பு தோசை செய்து சாப்பிடலாம். அதற்கான செய்முறை இதோ.

தேவையானவை:

பச்சரிசி - 1/2 ஆழாக்கு
பயத்தம் பருப்பு - 1 ஆழாக்கு
பச்சை மிளகாய் - 2
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயம் - சிறிது
வெங்காயம் - 1 (பெரியது)
தேங்காய் - 1 மூடி (துருவியது)
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெங்காயத்தைப் பொடியாக அரிந்து கொள்ளவும். அரிசி, பருப்பை தனியே ஊறப் போடவும்.

இரண்டையும் அரைத்து, மிளகாய், பெருங்காயத்தையும், உப்பையும் சேர்த்து அரைக்கவும்.

அரிந்த வெங்காயத்தையும் போட்டுக் கலந்து, மாவைக் கரைத்து, தோசைப் பதமாகச் சுடவும்.

இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எண்ணெய் விட்டு வார்த்தால் ருசியான பயத்தம் பருப்பு தோசை ரெடி!

குறிப்பு: இதை செய்து பார்த்துவிட்டு ருசி இல்லை என்றால் அதற்க்கு ப்ரியமுடன் எந்த விதத்திலும் பொறுப்பு கிடையாது. (திட்டுரவங்க மெயில் செய்து திட்டலாம்)

0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More