உலகம் என்பது பெரும் பங்கு நீராலும், குறைந்த பரப்பளவு நிலத்தாலும் சூழப்பட்டதாகும். இதைப் போலவே உடலும் பெரும்பங்கு நீரால் நிறைந்து உள்ளது. உடலுக்கு ரத்தமும், காற்றும் எவ்வளவுத் தேவையானதோ அதை விட அதிகமாக நீர் அவசியமாகிறது.
சாதாரணமாக ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் உடனடியாக ரத்தம் ஏற்றுவதில்லை, காற்றை செலுத்துவதில்லை. ஆனால் குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. இதிலிருந்தே நீரின் அத்தியாவசியத்தை உணரலாம்.

WD
இதேப் போல ஏதேனும் ஒரு நோயின் தாக்கத்தினாலோ அல்லது மருத்துவ சிகிச்சையின் காரணமாகவோ சாப்பிட இயலாமல் போகும் நோயாளிகளுக்குக் கூட குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. இதற்குக் காரணம் உடலுக்குத் தேவையான சத்துக்களை நாம் தண்ணீர் மூலமே அளித்து விட முடியும் என்பதால்தான்.
சராசரியாக 65 கிலோ எடையுள்ள ஒரு மனிதனின் உடலில் 40 லிட்டர் தண்ணீர் இருக்கும். அவ்வாறு 40 லிட்டர் நீர் இருந்தால்தான் அவன் ஆரோக்கியமான மனிதன். இதில் 28 லிட்டர் நீரானது உடலின் பல்வேறு உறுப்புகளில் இருக்கும் பல ஆயிரம் செல்லுக்குள் இருக்கிறது.அவ்வாறு செல்லிற்குள் இருக்கும் நீர் இன்ட்ரா செல்லுலர் வாட்டர் என்று அழைக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள திரவ நீரான பிளாஸ்மாவில் மட்டும் 3 லிட்டர் அளவிற்கு நீர் இருக்கும். மீதம் 9 லிட்டர் நீர் இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட இணைப்பு பாகங்களில் இருக்கும். இதில் ஏதேனும் ஒரு இடத்தில் இருக்கும் நீரின் அளவு குறைந்தாலும் உடல் பாதிக்கப்படுவது நிச்சயம்.
மேலும், உடலின் பல பாகங்கள் சீராக இயங்கவும் நாம் அருந்தும் நீரின் அளவு முக்கியமாக இருக்கிறது.
சில வியாதிகளுக்கு மருந்தாகவும் நீர் உள்ளது. மஞ்சள் காமாலை பாதித்தவரின் கல்லீரலுக்கு அதிகப்படியான நீர் தேவைப்படும். இந்த சமயத்தில் குளுக்கோஸ் ஏற்றுவதால் மஞ்சள் காமாலையின் தீவிரம் குறையும்.
இதேப் போன்று சிறுநீரகத் தொற்று மற்றும் சிறுநீரகப் பாதைத் தொற்று நோய்களுக்கும், தொடர்ந்து குளுக்கோஸ் ஏற்றுவதும், அதிகப்படியான நீர் அருந்துவதுமே சிறந்த மருந்தாக அமையும்.
கர்ப்பிணிப் பெண்கள் தினமும் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். நீர் என்பது அவர்களது உடலுக்கு மட்டுமல்லாமல், உள்ளிருக்கும் குழந்தைக்கும் மிகவும் தேவையான ஒன்றாகும்.
கருப்பைக்குள் குழந்தையுடன் இருக்கும் நீரின் அளவு குறையும் போது உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவிக்க வேண்டிய கட்டாயம் கூட நேரிடலாம். எனவே, குழந்தையின் கருப்பைக்குள் இருக்கும் நீர் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு அவசியமாகிறது. எனவே கர்ப்பிணிப் பெண்கள் நிறைய தண்ணீர் அருந்த வேண்டியது அவசியமாகிறது.
நீரிழிவு நோயாளிகளும், வெயிலில் அதிக நேரம் பணியாற்றுபவர்களும் சராசரி மனிதர்களை விட அதிகப்படியான நீரை அருந்தினால், உடலின் ஆரோக்கியத்தைக் காக்கலாம்.
மேலும், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அருந்தும் நீரானது பல வியாதிகளுக்கு சிகிச்சையாக அமைகிறது. காலையில் எழுந்ததும் காபி, டி போன்றவற்றை அருந்துவதால் பித்தம் அதிகரிக்குமேத் தவிர உடலுக்குப் பலன் தராது. எனவே, காலைலயில் எழுந்ததும் பற்களை சுத்தம் செய்துவிட்டு நீர் அருந்தும் பழக்கத்தைக் கைகொண்டால் பலரும் உடல் ஆரோக்கியத்தோடு வாழலாம்.
தற்போது மருத்துவ சிகிச்சை முறையிலேயே தண்ணீர் சிகிச்சை என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனைக் கையாண்டு பலரும் குணம் அடைந்து வருகின்றனர்.
உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையல்ல, தண்ணீர் தான் முக்கியத் தேவை. தண்ணீர் குடித்தால் வாயில் இருந்து ஆரம்பித்து, வயிறு, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடத்தையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கிக் கொண்டு கடைசியில் உடலில் இருக்கும் தேவையற்ற விஷயங்களை எடுத்துக் கொண்டு வெளியேறி விடுகிறது.
இதுபோன்ற மகத்துவமான பணியை வேறு எதனாலும் செய்ய இயலாது. நீர் அருந்துவதன் அவசியத்தை விட, அதனை சுத்தமாக காய்ச்சி வடிகட்டி அருந்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
பல நோய்த் தொற்றுகளுக்கும், சுகாதாரமற்ற நீரேக் காரணமாகிறது. எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முதலில் சுத்தமான நீரை அதிக அளவில் அருந்தும் பழக்கத்தைக் கைக்கொள்ளுங்கள்.
0 comments:
Post a Comment