Blogroll

Monday, August 1, 2011

ஓஷோ-சிந்தனைகள்















எப்படி கண்ணில் பட்ட மணல் இந்த அழகிய உலகைப் பார்க்க முடியாமல் செய்து விடுகிறதோ,அதைப்போல சிறிய சந்தேகம் அல்லது தயக்கம் இந்த வாழ்வின் பெருமை,அழகு,உங்கள் பலம்,உங்களது மலரும் தன்மை அனைத்தையும் மறைத்துவிடும்.
**********
பொதுவாக மனிதர்கள் கோபம்,வெறுப்பு போன்றவைகளை தங்களிடம் சேர்த்து வைத்துக்கொண்டு,அந்தக் கெடுதல் உணர்வுகளை வெளியேற்ற தகுந்த சந்தர்ப்பத்தை தேடுகிறார்கள்.ஏதாவது சிறு காரணம் போதும்.அவை வெளிப்பட்டுவிடும்.
**********
செயல்பாட்டில் ஒவ்வொரு மனிதனும் ஒரு குழுவுக்குத் தலைவனாக இருக்கவே விரும்புவான்.ஒவ்வொருவரும் அடுத்தவரை அதிகாரம் செய்யவும் அடுத்தவரை வழி நடத்திச் செல்லவும் ஆசைப் படுவான்.அவன் மக்களுக்கு சொல்லும் அறிவுரையில் உண்மை அல்லது நன்மை இருக்கிறதா என்பது பற்றி அவனுக்கு அக்கறை கிடையாது.இங்கு எது முக்கியம் எனில்,அப்படி எடுத்து சொல்வதால் அவனுக்கு ஒரு திருப்தி ஏற்படுகிறது.ஏனெனில் அவனை பிறர் புத்திசாலி என்று மதிக்கிறார்கள்,என்று தனக்குத்தானே எண்ணிக் கொள்கிறான்.பல பேர் அவனை அண்ணாந்து பார்ப்பதில் அவனுக்கு ஒரு ஆத்ம திருப்தி.
**********
ஒரு மனிதர் சாவைக் கண்டு அஞ்சாதபோது,அவரை ஒரு செயலைச் செய்யச் சொல்லி வற்புறுத்த முடியாது.உங்களுடையஅச்ச உணர்வுதான் உங்களை அடிமையாக்குகிறது.உண்மையில்,நீங்கள,எங்கே மற்றவர்களால் அவமானப்படுத்தப் பட்டு விடுவோமோ என்ற அச்சத்தால் தான் மற்றவர்களை அடிமையாக்க முயற்சி செய்கிறீர்கள்.ஒருவர் தைரியமாகஇருந்தால் யாரையும் அச்சப்படுத்தவோ ,மற்றவர்களால் அச்சுறுத்தப்படவோ மாட்டார்கள்.
**********
அமைதியாய் இருங்கள்.ஆனால் அந்த அமைதியை ஒரு சோகமாக ஆக்கி விடாதீர்கள்.அதை ஒரு சிரிப்பாகவும்,நடனமாகவும் இருக்க விடுங்கள்.அந்த அமைதியானது குழந்தைத் தன்மையுடன் கூடியதாக இருக்கட்டும்.ஆற்றல் நிரம்பி வழிவதாக இருக்கட்டும்.அது செத்துப்போன சவமாக இருக்க வேண்டாம்.

0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More