Blogroll

Tuesday, September 6, 2011

பள்ளிபாளையம் சிக்கன்


பள்ளிபாளையம் சிக்கன்

பள்ளிபாளையம் சிக்கன் கொங்கு நாட்டு சமையலில் பிரசித்தி பெற்றது.நான் வீட்டில் செய்துபார்த்து, நன்றாக வந்ததால் உங்களுடன் பகிர்த்துகொள்ள ஆசைபடுகிறேன்.


தேவையான பொருள்கள்


சிக்கன் ---அரைகிலோ
சின்ன வெங்காயம்---டூ பிப்டி கிராம்ஸ்
காய்ந்த மிளகாய் ---பிப்டீன்
மிளகாய் பொடி---ஹல்ப் டீஸ்பூன்
மஞ்சள் பொடி---கோட்டர் டீஸ்பூன்
எஞ்சி பூண்டு விழுது ---இரண்டு ஸ்பூன்
மல்லி பொடி---ஹல்ப் டீஸ்பூன்
தேங்காய் ---பல்லு பல்லாகநறுக்கியது கோட்டர் கப்
தக்காளி --- ஒன்று
கறிவேப்பிலை ---கைப்பிடி அளவு
எண்ணெய்--- தேவையான அளவு
உப்பு ---தேவையான அளவு

செய்முறை

எந்த வகை உணவு செய்வதற்கு எலும்போடு ஒட்டிய சிக்கன் ருசியாக இருக்கும் ,அதை நன்றாக கழுவி வைக்கவும்.


சின வெங்காயம்,தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.


வானலியில் தேவையான எண்ணெய் விட்டு காய்தவுடன் மிளகாயை கிள்ளி போடவும் .பிறகு கறிவேப்பில்லைசின்ன வெங்காயம்,தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

பின்னர் எஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும் .

நன்றாக சுருள வதகியவுடன் அதில் சிக்கனை போட்டு கிளறி மஞ்சள் பொடி, மல்லிபொடி, மிளகாய் பொடி சேர்த்து நன்றாக கிளற வேண்டும் .

பிறகு உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு ,மூடி போட்டு குறைந்த தணலில் வேகவிடவும் .

நன்றாக நீர் வற்றி சிக்கன் வெந்த பிறகு பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய்
போட்டு ௧ரு கிளறு கிளறி எடுக்கவும்.



செய்துபார்த்துவிட்டு கமெண்ட்ஸ் கூறுங்கள் நண்பர்களே,மீண்டும் நாளை வேறு வகை உணவு செய்து பார்த்து விட்டு உங்களுடன் பகிர்த்து கொள்கிறேன் நன்றி வணக்கம் .




4 comments:

செய்தது பார்த்து தான் அடுத்ததும் சொல்வீர்களா?? என்ன கொடுமை இது.. நீங்கள் சமைத்ததை நீங்கள் ருசித்து சொல்லுங்கள்...சும்மா தமாசு தான்... கோபம் வேண்டாம்...
ஹல்ப் டீஸ்பூன் (அரை தேக்கரண்டி)
பிப்டீன் (பதினைந்து)
கோட்டர் டீஸ்பூன் (காள் தேக்கரண்டி)
உடனே நக்கீரரே என்று சொல்ல வேண்டாம் (அல்லது மனதுக்குள் நினைக்க வேண்டாம்).... நம் மொழியை சிறப்பாக எழுத நாம் தான் பழக வேண்டும். புரிந்து கொண்டமைக்கு நன்றி.............. என்றும் அன்புடன், சக்கரை

அடுத்து மேட்டுப்பாளையம் சிக்கன் எப்போ செய்து காட்டுவீர்கள்.

hahahha sakkarai nanbare nan number potten vara villai athu tan epadi pottu vitten aduthu murai neegal solliyavaru seikiren


mams 2day recipe ready, ena teriyuma chicken pepper roast, senju parthachu epo sola poren hahahaha

laxuu.. :(
pls next time upload in english :( n mite b gud if u upload veggie dishes :)

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More