இந்தியாவில் படிப்பறிவு இல்லாத பலரும் செய்யும் ஒரு தொழில் வீட்டு வேலைக்குச் செல்வது. படிப்பறிவில்லாத ஏழை பெண்கள் அருகில் இருக்கும் வீடுகளுக்கு வீட்டு வேலை செய்யச் சென்றாலே அங்கு அவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாதவை. இதில் வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களின் நிலையை எடுத்துக் கூற வேண்டுமா?
ஊரில் பிழைப்பின்றி, குடும்பத்தின் வறுமையை கருத்தில் கொண்டு, தெரிந்தவர்கள் மூலமாக வெளிநாடுகளுக்கு வீட்டு வேலை செய்யப் போகும் பெண்கள் பலரது நிலைமையும் கவலை கொள்ளும் விதமாகவே உள்ளது.

WD
வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இத்தனை மணி நேரம்தான் வேலை என்றில்லாமல் நாள் முழுவதும் வேலை அளிக்கப்படுகிறது. சில நேரங்களில் போதிய உணவும் அளிக்கப்படாமல், பேசிய ஊதியமும் அளிக்காமல் வைத்துக் கொள்ளும் எஜமானர்களும் உண்டு.
சிறு தவறுகளுக்காக அடிப்பது, உதைப்பது, திட்டுவது என்றும் நித்தம் நித்தம் இதுபோன்ற பெண்கள் அனுபவிக்கும் கொடுமை ஏராளம். இதற்கெல்லாம் மேலாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதும் அதிகரித்துள்ளது.
வீட்டு வேலைக்குச் சேர்ந்ததும், எஜமானரிடம் தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக உள்ளது. இதுபோன்றவர்கள் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டு மிரட்டியே பல காரியங்களை சாதித்து விடுகின்றனர்.
பாஸ்போர்ட்டும் கிடைக்காமல், சொந்த நாட்டுக்கு திரும்பிப் போகவும் முடியாமல், வேலை பார்க்கும் இடத்தில் நடக்கும் கொடுமைகளை வீட்டிற்கும் தெரியப்படுத்தாமல் பல பெண்கள் அனுபவிக்கும் இன்னல்கள் சொல்லி மாளாதவை.
தற்போது, இந்த பிரச்சினையைக் கருத்தில் கொண்டு பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகள், தங்கள் நாட்டுப் பெண்கள வெளிநாடுகளுக்கு வீட்டு வேலை செய்யப் போவதை தடை செய்துள்ளது. இதனால், இந்தியா, இலங்கை, பிலிப்பைனஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் தற்போது அதிகளவில் வெளிநாடுகளுக்குச் செல்ல துவங்கியுள்ளனர்.
0 comments:
Post a Comment