Blogroll

Wednesday, August 10, 2011

தங்கத்தின் விலை 1,900 டாலராக உயரும்: சீனா மதிப்பீடு

அமெரிக்காவின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதில் ஏற்பட்டுள்ள தயக்கத்தின் காரணமாக, தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதால், இந்த ஆண்டின் இறுதிக்குள் தங்கத்தை விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 1,900 டாலர்களுக்கு உயரும் என்று சீனத்தின் தங்க உற்பத்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஜிஜின் மைனிங் குரூப் எனும் சீன நிறுவனத்தின் தலைவர் ஷென் ஜிங்கீ, “அமெரிக்க டாலர் தொடர்ந்து பலவீனமடைவதால், தங்கத்தில் முதலீடு அதிகரிக்கும், அது தங்கத்தின் விலையை கடுமையாக உயர்த்தும்”என்று கூறியுள்ளார்.

தங்கத்தின் சுரங்க விலை இன்று ஒரு அவுன்ஸூக்கு 1,778 டாலராக உள்ளது. இது இந்த ஆண்டின் இறுதிக்குள் 1,900 டாலர்களுக்கு உயரும் என்று ஜிங்கீ கூறியுள்ளார்.

இந்தியாவில் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 26,000 ரூபாயைத் தாண்டியுள்ளது. சீன சுரங்கத் தலைவர் கூறியுள்ளது படி, இந்த ஆண்டின் இறுதிக்குள் இது 30,000 ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More