Blogroll

Saturday, July 23, 2011

டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம்


இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் டோனி பந்து வீசினார். முன்னணி வீரர் ஜாகீர்கான் இல்லாததாலும், பவுலர்கள் பந்து வீசி சோர்வடைந்ததாலும் அவர் பந்து வீசினார்.
டோனி நேற்று 8 ஓவர்கள் வீசினார். ஒரு ஓவர் மெய்டனாக இருந்து 23 ரன் கொடுத்தார். ஒரு விக்கெட் கைப்பற்ற வேண்டியது அப்பீல் முடிவால் பீட்டர்சன் அவுட் ஆவதில் இருந்து தப்பித்தார். டோனி பந்து வீசுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 3 முறை டெஸ்டில் பந்து வீசி இருக்கிறார். இதற்கு முன்பு பாகிஸ்தான் (2005-06), இங்கிலாந்து (2008-09), நியூசிலாந்து (2010-11) ஆகிய அணிகளுக்கு எதிராக தலா ஒரு ஓவர் வீசியுள்ளார். ஆனால் தற்போது தான் 8 ஓவர் வீசியுள்ளார்.


விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. ஆனால் ஒரு நாள் போட்டியில் 2 ஓவர் வீசி 14 ரன் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றியுள்ளார். ஏற்கனவே விக்கெட் கீப்பர்களாக இருந்த செய்யது கிர்மானி, கிரண்மோரே, அஜய் ரத்ரா ஆகியோரும் பவுலிங் செய்து உள்ளனர்.
இந்த நிலையில் பந்து வீசியதற்காக டோனியை முன்னாள் கேப்டன் கபில் தேவ் விமர்சனம் செய்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
டோனிதானே முன் வந்து பந்து வீசியது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை கேலி-கிண்டல் செய்வது போல் இருந்தது. லார்ட்ஸ் டெஸ்டின்2-வது நாள் ஆட்டத்தில் டோனியின் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள இயலாது அவர் பந்து வீசி இருக்கக் கூடாது. ஜாகீர்கான் ஒரு பொறுப்பான பவுலர். தற்போது அணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அவரே பொறுப்பு.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுவதற்கு முன்பு அவர் உடல் தகுதியை பரிசோதனை செய்து இருக்க வேண்டும் அவரது உடல் தகுதி பற்றி அவருக்குத்தான் தெரியும். டெஸ்ட் போட்டியில் ஒரு நாளைக்கு 20 ஓவர் வீசுவது என்பது கடினம்தான் இதற்கு அவரே முழு பொறுப்பு. இந்தச் டெஸ்டில் இந்தியாவின் வாய்ப்பை அவர் சாகடித்து விட்டார்.

0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More