Blogroll

Sunday, July 31, 2011

முதியோர் இல்லத்தில் இருக்கிறார்களா உங்கள் பெற்றோர்!


பிள்ளைகளால் சிரமப்படும் பெற்றோர் முதியோர் இல்லங்களுக்கு மனம் உடைந்து செல்கின்றனர். அல்லது கட்டாயமாக அனுப்பப்படுகின்றனர். ஆனால், அவர்களுக்கு எந்தளவுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்பது குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். எவன் ஒருவன் தன் தந்தையின் பக்கம் வெறுப்பான பார்வையைச் செலுத்துவானோ அவன் பெற்றோருக்கு அடி பணிந்தவனாக மாட்டான்.

  • உமது தந்தைக்கு முன்பாக நீர் நடக்காதீர். அவர் உட்காருவதற்கு முன் நீர் உட்காராதீர். அவருடைய பெயரைச் சொல்லி அழைக்காதீர். மேலும், அவரைப் பற்றி எவரிடமும் குறை சொல்லித் திரியாதீர்.
  • வயது வந்த பெற்றோர்களுக்கு (தாய் தந்தை இருவரில்) ஒருவர் இருந்து அவருக்கு (பிள்ளைகள்) செலவு செய்யவில்லையானால், அவர்கள் சுவர்க்கம் நுழைய முடியாது.
  • பெற்றோர்களுக்கு உதவி செய்யும் பிள்ளைகளுக்கு (எனது) வாழ்த்து உண்டாகட்டும். அவருடைய வயதை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக.
  • பெற்றோரை (மனம் நோகச் செய்து) அவர்களை அழுது கண்ணீர் வடிக்கச் செய்வது பெரும் பாவமாகும், தண்டனைக்குரியதாகும்.
  • பெற்றோரை துன்புறுத்திய ஒருவன் மன்னிப்புக்கேளாமல் இறந்து விடுவானாயின், கியாமநாளில் அவன் குஷ்டரோகியாக எழுப்பப்படுவான்.
  • பெற்றோர் தனக்கு அநியாயம் செய்தாலும் அவர்களிடம் பிள்ளைகள் அன்பைச் செலுத்துவது கட்டாயக் கடமையாகும்.இவ்வளவையும் படித்த பின்பு, நிச்சயம் மனம் மாறும் தானே!
- நன்றியுடன்... ப்ரியமுடன்

0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More