பெண்ணாய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும் என்று வாக்கு இருக்கிறது. ஆனால் பெண்ணாய் பிறந்தவள், அவளது பெற்றோருக்குக் கூட உதவ முடியாத ஒரு நிலை தற்போது சமுதாயத்தில் உள்ளது.
அதாவது, பெற்றோரின் சொத்தில் சம பங்கு தர வேண்டும் என்று பெண்ணிற்கு உரிமை வாங்கித் தந்த இந்த சமூகம், அந்த பெண்ணால் பெண்ணைப் பெற்ற பெற்றோருக்கு எந்த ஆதாயமும் கிடைக்க வழி செய்யவில்லை.
WD
அதேப்போல, அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு ஆணுக்கு ஈ.எஸ்.ஐ. பணம் பிடிக்கப்பட்டு, அதற்கான சேவையைப் பெறுவாரானால் அவரது தாய், தந்தைக்கும் அது பொருந்தும். இதுவே திருமணமான பெண் என்றால் அதில் அவளது கணவன் மற்றும் குழந்தைகள் மட்டுமே இடம்பெறுவர். (தற்போது இது மாற்றியமைக்கப்பட்டு வருகிறது)
இதேப்போல, ஒரு பெண் தனது திருமணத்திற்குப் பிறகு தான் பிறந்த வீட்டை எந்த வகையிலும் ஆதரிக்க இந்த சமூகம் வழி செய்யவில்லை.
இந்த நிலையில், ஒரு பெண் தன்னுடைய பிறந்த வீட்டிற்கு ஆதரவாக இருப்பதை அவளுடைய திருமணம் மாற்றி விடாது என்று மும்பை உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1994-ம் ஆண்டு மராட்டிய அரசு சட்டத்தின்படி, அரசுத் துறையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பணியின்போது இறந்து விட்டாலோ அல்லது முன்கூட்டியே ஓய்வு பெறும் பட்சத்திலோ, அவர்களுடைய மகன் அல்லது மகள் அல்லது சட்டப்பூர்வ உரிமை பெற்ற வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும். ஆனால் பெண் பிள்ளையாக இருக்கும்பட்சத்தில், அவர் திருமணமாகாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவருக்கு வேலை கிடைக்கும்.
இந்த சட்டத்தின்படி புனேயை சேர்ந்த மேதா பார்கே என்ற பெண்ணுக்கு அரசு வேலை தரப்பட்டது. அவருடைய தந்தை முன்கூட்டியே ஓய்வு பெற்றதை தொடர்ந்து, மேதா பார்கேவுக்கு வேலை கிடைத்தது. அப்போது அவருக்கு திருமணம் ஆகவில்லை. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் காத்திருப்பு பட்டியலில் இருந்த பிறகு அவருக்கு வேலை கிடைத்தது. இந்த 3 ஆண்டு காலத்தில் அவருக்கு திருமணம் நடந்து விட்டது.
எனவே இதனை காரணம் காட்டி கடந்த 2005-ம் ஆண்டு, டிசம்பர் 21-ந் தேதி அன்று மேதா பார்க்கர் திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.
0 comments:
Post a Comment