
நாட்டு கோழி குழம்பு செய்ய தேவையான பொருள்கள் :-
நாட்டு கோழி ---- அரை கிலோ
சின்ன வெங்காயம் ----பதினைத்து
சிவப்பு மிளகாய் ----இருவது
மிளகு ----அரை ஸ்பூன்
சீரகம் ----அரை ஸ்பூன்
கொத்துமல்லி விதை ---- ஒரு ஸ்பூன்
தேங்காய் கீத்து----ஒன்று [சிறிய அளவு ]
தேங்காய் பால்---- ஒரு சிறிய கிண்ணத்தில்
தேங்காய் பொடிபொடி துபில் நறுக்கியது ---- வைத்து
கரிவேபில்லை ---- தேவையான அளவு
மிளகாய் பொடி [தேவைபட்டாள்]----கால் ஸ்பூன்
நல்லெண்ணெய் ---- இரண்டு குழி கரண்டி
செய்முறை:-
கோழியை நன்கு மஞ்சள் போட்டு கழுவி எடுக்கவும்,பின்பு ஒரு வானலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகு, சிரகம்,கொத்துமல்லி விதை,ஒன்று ஒன்றாக போட்டு சிறு தணலில் வதக்கவும் பின்பு சின்ன வெங்காயம் போட்டு வதக்கிய தும் , மிளகாய் போட்டு வதக்கி, அடுப்பை நிறுத்தி விட்டு தேங்காய் கித்தை போட்டு ஒரு கிளறு கிளறவும்.பின்னுபு நன்கு ஆற விடவும்.
எபோது கூகரை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் சிறிது போட்டு வதக்கி கழுவிய நாட்டுகோழியை போட்டு நன்கு கிளறவும் பின்பு வதக்கி வைத்து இருக்கும் பொருள்களை மிக்சி யில் போட்டு மைய அரைக்கவும்,அந்த கலவையை கோழியோடு சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும் சிறிது மிளகாய் போடி தேவை என்றால் சேர்க்கலாம் எப்போது சிறு சிறு பல்லாக நறுக்கிய தேங்காய்,கறிவேப்பிலை மற்றும் தேங்காய் பால் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கூகரை மூடி விசில் விடவும்.
எப்போது சுவையான மனமான நட்டு கோழி குழம்பு தயார்
0 comments:
Post a Comment