
இந்த நோக்கியாவின் புதிய ரீமிக்ஸ் ரிங்க்டோனை வடிவமைக்கும் பொறுப்பை வாசகர்களுக்கு போட்டியாக அறிவித்துள்ளது நோக்கியா நிறுவனம். உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நீங்கள் இந்த போட்டியில் பங்கு பெறலாம் இதற்கான எந்த வரம்புகளும் இல்லை. இது போன்று வாசகர்களிடம் கொடுப்பது இதுவே முதல் முறை. போட்டியின் பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா $10,000( இந்திய மதிப்பில் ரூபாய் 4500000 மேல்)
போட்டிக்கான விதிமுறைகள்:
- நீங்கள் புதுவிதமான அனைவரையும் கவரக்கூடிய வகையில் ரிங்டோன் இருக்க வேண்டும்.
- முதலில் ஐந்து நபர்களை இறுதி போட்டிக்கு தேர்வு செய்வார்கள். இதிலிருந்து ஒருவரை வெற்றியாளராக அறிவிப்பார்கள்.
- இறுதியில் வெற்றி பெறுபவருக்கு $10,000 டாலரும்(ரூபாய் 4,500,000 மேல்) மற்ற நான்கு பேருக்கு தலா $1,000டாலரும் (ரூபாய் 45,000 மேல்) பரிசளிப்பார்கள்.
- கடைசி தேதி அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் உங்களுடைய ரிங்டோன் அனுப்பி விட வேண்டும்.
உதவிக்கு கீழே உள்ள வீடியோவை பாருங்கள்
போட்டியில் கலந்து கொள்ள Nokia Audio Draft தளத்திற்கு செல்லுங்கள். அங்கு Submit a New Entryஎன்ற பட்டனை அழுத்தி உங்களுடைய ரிங்க்டோனை அனுப்புங்கள் பரிசை தட்டி செல்லுங்கள்.
போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment