Blogroll

வயது ஏறினால் அழகும் கூடும்!

குழந்தையாக இருக்கும் போது தொடங்கி பேரிளம் பெண்ணாக மாறும் வரை பெண்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் அழகுதான். எந்தப் பெண்ணையுமே அழகில்லை என்று கூற யாருக்குமே மனசு வராது...

Wednesday, November 30, 2011

இணையத்தில் அதிக வருவாய் ஈட்டும் தளங்கள்!

இணையத்தில் அதிக வருவாய் ஈட்டும் தளம் எது என்ற கேள்வி எழுந்தால், நம்மில் பலர் அளிக்கும் பதில் கூகுள் அல்லது பேஸ்புக் என்றே இருக்கும்.எனினும் உண்மை அதுவல்ல. இணையத்தில் அதிக வருவாய் ஈட்டும் தளம் அமேசன்.கொம் ஆகும்.1. Amazonஇணையத்தில் பொருட்களை வாங்க உதவும் தளம் இது. பொருட்களை வாங்குவதற்கான ஒன்லைன் சந்தையாக விளங்கும் இது, விநாடிக்கு $776.66 படி. இதன் மொத்த வருடாந்த வருவாய் $24,509,000,000 ஆகும்.2. Googleஇணைய உலகில் கூகுள் தொடர்பில் அறியாதவர் எவருமிலர் எனலாம். இதன் வருட வருமானம் $23,650,560,000. ஒரு வினாடிக்கு $749.46 ஆகும்.3. Comcastஅதிகம் சம்பாதிக்கும் பட்டியலில் இந்த தளம் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தத் தளத்தின் ஆண்டு வருமானம் $8,727,360,000 ஆகும்....

Monday, November 28, 2011

பெண்ணின் மனசு அவ்வளவு ஆழமா?

கடலின் ஆழத்தில் உள்ளதைக் கூட கண்டுவிடலாம், பெண்ணின் மன ஆழத்தில் புதைந்து கிடப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று கவிஞர்களும், உளவியல் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆய்வாளர் பேகோ ஆய்வு செய்துள்ளார். எண்ணற்ற பெண்களிடம் பேசியதன் அடிப்படையில் அவர்களின் மனதிற்குள் புதைத்து வைத்திருந்த ரகசியங்களை வெளிக்கொண்டுவந்துள்ளார்.பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன என்பதைப்பற்றி பேகோ மிகப்பெரிய...

கணவரை 'கைக்குள்' வைப்பது எப்படி?

உங்கள் கணவரை உங்கள் கைக்குள் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? 'ஆமாம், ஆமாம்' என்று நீங்கள் அதி வேகமாக பதி்ல் சொல்வது தெரிகிறது. கணவரின் அன்பை நிரந்தரமாகப் பெறுவதற்கு நிறைய வழிகள் உள்ளன. என்னென்ன செய்யலாம் என்று கொஞ்சம் பார்ப்போமா..காதலர்கள் மட்டும் தான் ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்றில்லை. கணவனும், மனைவியும் கூட சொல்லலாமே. தினமும் உங்கள் கணவரிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள். அவர் மகிழ்ந்து போய் ஐ லவ் யூ டூ டா செல்லம் என்று சொல்வார்.கணவர் காலை அலுவலகத்திற்கு...

கல்யாணமாயிட்டா 'உண்டாகலாம்', குண்டாகக் கூடாது!

திருமணத்திற்குப் பிறகு பெரும்பாலான ஆண்களும், பெண்களும் தங்கள் உடலைப் பராமரிப்பதில்லை. கேட்டால் அதான் கல்யாணம் ஆயிடுச்சே, இனி நான் எப்படி இருந்தால் என்ன என்று அலட்சியமாக பதில் சொல்வார்கள்.திருமணத்திற்கு முன்பு ஆண்களும், பெண்களும் உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்கத் தேவையான அனைத்தையும் செய்வார்கள். ஆனால் திருமணம் முடிந்துவிட்டது என்றால் அதை அப்படியே மறந்துவிடுவார்கள். இதில் ஆண்களை விட பெண்கள்தான் ரொம்ப மோசம். கட்டுடலை அப்படியே தளர விட்டு விடுவதில் அவர்கள்தான்...

Sunday, November 13, 2011

How to use STEREO MIX in WIN-7

STEP - 1STEP - 2STEP - 3STEP - 4STEP - 5STEP - 6.0STEP - 6...

Tuesday, November 8, 2011

மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!

கணவன் மனைவி என்று இருந்தால் அங்கு பிரச்சனை இல்லாமலா இருக்கும். ஆனால் அவ்வப்போது எழும் பிரச்சனைகளை அப்பொழுதே மறந்துவிட்டால் இல்லறம் நல்லறமாக இருக்கும். இல்லை என்றால் திருமண வாழ்க்கை கசந்துவிடும்.மனைவிகளிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்,1. எப்பொழுது பார்த்தாலும் நை, நை என்று நச்சரிப்பது. என்னங்க வீட்டுக்கு ஒரு புது டிவி வாங்கலாம், புது டிசைன் நகை வாங்கலாம் என்று பெரிய பட்டியல் போடுவது. கணவன் வரவுக்கேற்ப செலவழித்தால் நல்லது.2. கேள்வி கேட்டே...

வயசான காலத்தில பெத்தவங்கள அலைக்கழிக்காதீங்க

ஆடி, ஓடி முடிந்து அமைதியாக வாழ்க்கையை வாழ வேண்டிய நேரத்தில் வயதானவர்கள் என்று கூட பார்க்காமல் பிள்ளைகள் பெற்றவர்களை கஷ்டப்படுத்துகின்றனர். வ.தான காலத்தில் பெற்றோர்கள் இருவரும் சேர்ந்து இருக்கத் தான் ஆசைப்படுவார்கள். ஆனால் தற்போதுள்ள தலைமுறை அவர்களை பிரித்து வைத்துவிடுகிறது.அம்மா தலைமகன் வீட்டில் ஒரு மாதம் இருந்தால், அப்பா இளையவன் வீட்டில் இருப்பார். அடுத்த மாதம் இருவரும் இடமாறிவிடுகிறார்கள். அதிலும் அம்மாவுக்கு தான் அதிக மவுசு. காரணம் அம்மா வீட்டு...

Sunday, October 30, 2011

மாமியார் மெச்சும் மருமகளாக நடந்துகொள்ளுவது எப்படி?

இந்தக் கேள்விக்கு பதில் ரொம்ப சிம்பிள்.... அன்பாக நடந்து கொண்டால் உங்கள் மாமியார் உங்கள் அன்புக்கு அடிமையாகிவிடுவார்!நான் என்ன செய்தாலும் என் மாமியார் குறை கூறுகிறார். அவரை திருப்திபடுத்துவே முடியாது. நல்ல மாமியார் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது தான் அனைத்து மருமகள்களும் கூறுவது. அப்படிப்பட்ட மாமியாரை எப்படி கைக்குள் போடுவது என்று பார்ப்போம்.ஒரு பிரச்சனை வந்தால் ஒன்றுக்கு, இரண்டு முறை சிந்தித்து செயல்படுங்கள். உங்கள் பக்க நியாயத்தை...

Thursday, October 27, 2011

வீட்டுக்காரரர் கோச்சுக்கிட்டாரா?,

கணவன், மனைவி என்று இருந்தால் சண்டையில்லாமல் இருக்காது. சண்டை போட்டால் சமாதானம் ஆகும் வழியைத் தான் பார்க்க வேண்டுமே தவிர பிரச்சனையை பெரிதுபடுத்த முயற்சி்க்கக் கூடாது. வீட்டுக்காரர் கோச்சுக்கிட்டா மனைவிமார்கள் எப்படி எல்லாம் சமாதானப்படுத்தலாம் என்று பார்ப்போம்,தவறு உங்கள் மீது தான் இருக்கிறது என்று தெரிந்தால் நீங்களாகவே முன்வந்து என்னங்க, மன்னிச்சுக்கோங்க தெரியாம பேசிட்டேன், மனசில வச்சுக்காதீங்க என்று கூறலாம். அவர் கண்டிப்பாக மன்னித்துவிடுவார். மாறாக...

Wednesday, October 26, 2011

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் புன்னகை

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பார்கள். அது நூறுசதவிகிதம் உண்மைதான். ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனத்தில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும். மன இறுக்கம், மனச்சோர்வு, மன உளைச்சல், மனப்புழுக்கம் என்பவை எதனால் எப்படித் தோன்றியது? எப்படிப் போக்குவது? என்று தெரியாமல் குழப்பிப் போகின்றவர்கள், பலர். இந்த மன இயல்பு மாற்றத்துக்கு மா மருந்தாக இருப்பது, சிரிப்பு. வாய்விட்டுச் சிரித்தால்...

Monday, October 24, 2011

காதல் சீரழிவு, சாட்டிங், ஆபாச எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக் - மனைவியைக் கொன்ற வாலிபரின் அதிர்ச்சி கடிதம்!

தன் காதல் மனைவி கலாச்சார சீரழிவில் சிக்கி தனக்குத் துரோகம் செய்த விவரங்களை, மனைவியைக் கொன்ற வாலிபர் மகேஷ்குமார் தற்கொலை செய்யும் முன்னர் காவல்துறைக்கு விவரமாக எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கேரளாவிலுள்ள மூணாறு விடுதி ஒன்றில் சமீபத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அவ்விடுதியில் அறை எடுத்திருந்த அவளுடைய கணவனே கொலை செய்து விட்டுத் தலைமறைவானதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட...

Thursday, October 6, 2011

பெண்பித்தன்

ஒரு ஊரில் இரு இணைபிரியா நண்பர்கள் இருந்தார்கள். ஒருவன் சோமு, இன்னொருவன் ராமு. ராமு பெயருக்கேற்றவாறே மிகவும் நல்லவன். குடிக்க மாட்டான், பெண்களுடன் ஊர் சுற்ற மாட்டான். ஆனால் சோமு அப்படியில்லை, எப்பொழுதும் குடி, பெண்கள் என்று வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருந்தன். ஒருநாள் இருவருக்கும் ஒரு சந்தேகம் வந்தது, ஒருவேளை இருவரில் யாராவது முதலில் இறந்து போய்விட்டால் என்னசெய்வது? இருவரும் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள், அதாவது ஒருநாள் யாராவது முதலில் இறந்துவிட்டால்...

சகோதரிகளின் கவனத்துக்கு

தமிழகத்தின் முக்கியமான நகரம் ஒன்றில் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த அந்த மாணவியின் வீட்டுக்கு, ''ரக்ஷனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருக்காங்களா..?'' என்று கேட்டு வந்தான் ஓர் இளைஞன். மகளை அழைத்து, ''யாரது உன்னைத் தேடி வந்திருக்கிறது..?'' என்று அப்பா கேட்க, அவனை யாரென்றே அவளுக்குத் தெரியாததால்... ''யாருனே தெரியலயேப்பா...'' என்றாள் ரக்ஷனா. கோபமான அப்ப, அவனைக் கடுமையாகக் கண்டித்தார். உடனே பதிலுக்கு, ''ஹலோ... உங்க பொண்ணோட ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் நான். ஈவ்னிங்...

Wednesday, October 5, 2011

கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்?

ஏப்பா தம்பி கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று ஆண்களிடம் கேட்டால், பெரும்பாலானவர்கள் ஐயோ, ஆளவிடுங்கன்னு ஓடுவது வழக்கமாகி வருகிறது. அப்படி அவங்க தலைதெறிக்க ஓடுற அளவு்ககு கல்யாணத்துல என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.கசப்பான அனுபவங்கள்: ஏற்கனவே திருமணம் ஆகி அது பிரிவில் முடிந்திருந்தால் மறுபடியும் திருமணம் செய்துகொள்ள தயங்குவார்கள். காதல் தோல்வி ஏற்பட்டிருந்தால் ஆமா, இனி என்னத்த கல்யாணம் செய்ய என்று ஆண்கள் விரக்தி அடைவார்கள்.சுதந்திரம்: திருமணம் ஆகாத...

Tuesday, October 4, 2011

ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்

நவராத்திரி விழாவையும், வெற்றித்திருநாளாம் விஜயதசமித் திருநாளையும் மகிழ்வுடன் கொண்டாடும் இந்த இனிய நன்நாட்களில் எனதருமை பெஸ்ட் தமிழ் சாட் நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஆயுதபூஜை,சரஸ்வதி மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணிவித்யராபம் கரிஷ்யாமி: சித்திர் பவதுமே சதா !!பொருள்:சரஸ்வதி தேவியே !வேண்டிய வரத்தை தருபவளே !உனக்கு நமஸ்காரம் ! எப்போது நான் கல்வி கலைகளை படிக்கச் துவங்குகிறேன் .எனக்கு...

Monday, October 3, 2011

நாட்டு கோழி குழம்பு

நாட்டு கோழி குழம்பு செய்ய தேவையான பொருள்கள் :-நாட்டு கோழி ---- அரை கிலோசின்ன வெங்காயம் ----பதினைத்துசிவப்பு மிளகாய் ----இருவதுமிளகு ----அரை ஸ்பூன்சீரகம் ----அரை ஸ்பூன்கொத்துமல்லி விதை ---- ஒரு ஸ்பூன்தேங்காய் கீத்து----ஒன்று [சிறிய அளவு ]தேங்காய் பால்---- ஒரு சிறிய கிண்ணத்தில்தேங்காய் பொடிபொடி துபில் நறுக்கியது ---- வைத்துகரிவேபில்லை ---- தேவையான அளவுமிளகாய் பொடி [தேவைபட்டாள்]----கால் ஸ்பூன்நல்லெண்ணெய் ---- இரண்டு குழி கரண்டிசெய்முறை:-கோழியை நன்கு...

4shared folderல் வார பத்திரிகைகள்

கீழே உள்ள 4shared folderல் வார பத்திரிகைகள் முடிந்த வரை உடனுக்குடன் upload செய்யபடுகிறது தேவையானதை தரவிறக்கம் செய்து கொள்ளவும்...ஆனந்த விகடன்,ஆன்மீக மலர்,பாலஜோதிடம்,சினி கூத்து,சினிமா எக்ஸ்பிரஸ்,என் விகடன்,கல்கண்டு,குமுதம்,குமுதம் ரேபோர்ட்டர்,குங்குமம்,குமுதம் சிநேகிதி,முத்தாரம் போன்ற புத்தகங்கள் உள்ளன.http://www.4shared.com/folder/3ePxhDCq/Weekly_Tamil_E-Books.htmlஜூனியர் விகடன் புக் லிங்க்:-http://www.mediafire.com/?smtzzde8oqeyjtuhttp://www.4shared.com/document/9XUaovMh/Junior_Vikatan_05102011_Techre.htmlதினமலர்...

Sunday, October 2, 2011

விண்டோஸ் 8ன் சிறப்பம்சங்கள்

மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 8ன் முதல் சோதனை பதிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதனை பலர் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள்.விண்டோஸ் 8 ஆனது பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.1. பயனர் இடைமுகம்(User Interface): இந்த இயங்குதளத்தில் பிரபலமான WP7 Metro பயனர் இடைமுடம் பயன்படுத்தப்படுகிறது.மேலும் இதில் மற்றொரு முக்கிய விஷயம் இதில் ஸ்டார்ட் மெனுவிற்கு பதிலாக ஸ்டார்ட் திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த திரை முழுவதும் குறுக்கு விசை ஐகான்களால் நிறைந்திருக்கும்,...

இல்லறத்தில் இணைந்தால் இனிமையாக வாழலாம்!

மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று அனைத்து மத சாஸ்திரங்களும் தெரிவிக்கின்றன. திருமணம் என்பது அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஆரம்பம் எனலாம். திருமணம் என்பது இருவர் மனமொத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியை இன்னும் அதிகரிக்கச் செய்வது. இந்த மகிழ்ச்சி என்பது பணமோ, புகழோ , அழகோ, படிப்போ, நல்ல குணமோ, வீரமோ ,காமமோ ஏதோ ஒன்றை அடிப்படையாக கொண்டிருக்கலாம். ஆனால் திருமணம் என்றாலே இன்றைய இளைஞர்கள்...

Friday, September 30, 2011

உணவு.. உடை.. இருப்பிடம்.. இன்டெர்நெட்

ஒரு மனிதன் வாழ அத்தியாவசிய தேவை உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம்.. இது கடந்த காலங்களில்.. தற்போது இதனுடன் ஒன்று புதிதாக இனைந்துள்ளது.. ஆம்.. இன்டெர்நெட்...இன்றைய இணைய உலகில் ஐம்பதை தாண்டிய பெரிசுகளே காதில் ஐபாடும், கையில் செல்போனுமாக திரிகிறபோது இளைஞர்களை பற்றி கேட்கவா வேண்டும்? காற்று, தண்ணீர், உணவை விட இன்டர்நெட் தேவைதான் இன்றைய இந்திய இளைஞர்களுக்கு மிக அத்தியாவசிய தேவையாகிப்போனதாக தெரிவிக்கிறது ஆய்வு ஒன்று.முன்பாவது இணையத்தில் உலாவர...

பாங்காக் டேஞ்சரஸ் - விமர்சனம்

முதலில் அந்த போஸ்டர்தான் ஈர்த்தது. தற்கொலை செய்யும் பொருட்டு இடது நெற்றியில் துப்பாக்கியை அழுத்திப் பிடித்திருக்கும் இளைஞனின் புகைப்படம். சுய இரக்கமும், தோல்வியும் ததும்பும் இளவயது முகம். யாரையும் பச்சாதவிக்க வைக்கும் அந்த இளைஞனின் முகம்தான் பாங்காக் டேஞ்சரஸ் படத்தைப் பார்க்க‌த் தூண்டியது.பாங்காக் டேஞ்சரஸ் தாய்லாந்தில் உருவான படம். இரு தொழில்முறை கொலையாளிகளை பற்றிய கதை. ஹீரோவுக்கு காது கேட்காது. அதனால் பேசவும் வராது. அவனுக்கொரு நண்பன். இருவரும் இணைந்துதான்...

Wednesday, September 28, 2011

மன அழுத்தத்தை வெளியேற்றுங்கள்!

பரபரப்பான இன்றைய கால கட்டத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை அனைவரும் ஏதோ ஒரு சூழலில் மன அழுத்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். பணிச்சூழல், வீட்டில் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றால் மன அழுத்தம் தாக்குவதால் பலரும் தன்னிரக்கத்தைத் தவிர்க்க முடியாமல் தவிக்கிறார்கள். “எனக்கேன் இது நிகழ்ந்தது மற்றவர்களுக்கு இப்படி இல்லையே” என்கிற எண்ணங்கள் எழும்போது தன்னிரக்கம் அவர்களின் செயல் திறனை மேலும் பாதிக்கிறது. மன அழுத்தத்தால்...

கனவு காண்பதால் மூளை சுறுசுறுப்படையும்!

ஏதாவது தவறு செய்துவிட்டாலோ, அல்லது நினைவில்லாமல் மறந்துவிட்டாலோ பிறரிடம் இருந்து முதலில் வரும் கேள்வி என்ன புத்தி மழுங்கிப் போச்சா என்பதுதான். அந்தளவிற்கு மனிதர்களுக்கு தலைமைச் செயலகமான மூளையின் பங்கு முக்கியமானது.மனிதர்களுக்கு வயசாக வயசாக, ஞாபக மறதி, தோல் சுருக்கம், நடை தளர்ச்சி, மூட்டுவலி இப்படி எத்தனையோ பிரச்சினைகள் வரத்தொடங்கும். அவற்றை தவிர்க்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் முதுமையினால் ஏற்படும் நோய்களை ஏற்றுக்கொள்ளும் மனமானது...

Tuesday, September 27, 2011

நகைச்சுவை

...

Sunday, September 25, 2011

உறவுகளை மதித்தால் பிரிவுகள் இல்லை

அன்பு என்ற வார்த்தைக்கு நிகரேது. அதனால்தான் அன்பின் பெருமையை எடுத்துக்கூறும் விதமாக திருவள்ளுவர் அன்புடைமை பற்றி தனி அதிகாரமே எழுதியுள்ளார். அன்பில் இடைவெளி விழுவதால்தான் கணவன் மனைவி இடையே பிரிவினை ஏற்படுகிறது. பந்தங்கள் பலவீனமடைகின்றன. அதனை அன்பின் மூலமாக மட்டுமே சரி செய்ய முடியும். பிறருக்காக இரக்கப்படுவது மட்டும் அன்பாகி விடாது. தன்னை நேசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே மற்றவரை நேசிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர் அறிஞர்கள். தூய அன்புடன் உணர்வுப்பூர்வமான...

மனம் மகிழும் மணவாழ்க்கைக்கான தாரக மந்திரங்கள்!

திருமணம் என்பது இருமணம் இணைவது மட்டுமல்ல. இருவேறு குடும்பங்களின் சங்கமம். தலைமுறை தலைமுறையாக சொந்த பந்தங்கள் தழைத்தோங்கும் என்பதால்தான் திருமணத்தை ஆயிரம் காலத்து பயிருக்கு சமமாக ஒப்பிடுகின்றனர். பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்யப்படுவதுதான் என்றாலும் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்படுவதாக பழமொழி தெரிவிக்கின்றன.திருமணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது போன்ற பழமொழியும் வழக்கத்தில் உள்ளன.பெற்றோர்கள்...

Page 1 of 3512345Next
Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More